ETV Bharat / sitara

நடிகர் சங்கத் தேர்தல்: 3 ஆண்டுகளுக்கு பிறகு நாளை வாக்கு எண்ணிக்கை! - தமிழ்நாடு நடிகர் சங்கத் தேர்தல்

மூன்றாண்டுகளுக்கு முன்னர் நடந்து முடிந்த நடிகர் சங்கத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நாளை (மார்ச் 20) சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற உள்ளது.

நடிகர் சங்கத் தேர்தல் - நாளை வாக்கு எண்ணிக்கை!

author img

By

Published : Mar 19, 2022, 11:07 PM IST

Updated : Mar 20, 2022, 6:51 AM IST

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த 2015ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் விஷால் தலைமையிலான பாண்டவர் அணி வெற்றி பெற்றது. இந்த நிர்வாகிகளின் பதவிக்காலம் 2018ஆம் ஆண்டு அக்டோபருடன் முடிவடைந்த நிலையில், செயற்குழு ஒப்புதலுடன் பதவிக்காலம் 6 மாதம் நீட்டிக்கப்பட்டது. அதன்பின்னர் 2019ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி, தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

நடிகர் சங்கத் தேர்தல்

நடிகர் விஷால் தலைமையில் பாண்டவர் அணியும், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணியும் நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டனர். பாண்டவர் அணியின் சார்பில் தலைவர் பதவிக்கு நாசரும், பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலும், பொருளாளர் பதவிக்கு கார்த்தியும் போட்டியிட்டனர். துணைத் தலைவர்கள் பதவிக்கு இந்த அணியின் சார்பில் பூச்சி முருகன், நடிகர் கருணாஸ் ஆகியோர் போட்டியிட்டனர்.

சுவாமி சங்கரதாஸ் அணி சார்பில் தலைவர் பதவிக்கு கே. பாக்யராஜ், பொதுச்செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ், பொருளாளர் பதவிக்கு நடிகர் பிரசாந்த் ஆகியோர் போட்டியிட்டனர். துணைத் தலைவர் பதவிகளுக்கு குட்டி பத்மினி, உதயா ஆகியோர் போட்டியிட்டனர். தபால் ஓட்டுகளையும் சேர்த்து வாக்களிக்கத் தகுதியுள்ள 3,173 பேரில் 1,604 பேர் ஓட்டு போட்டனர்.

நீதிமன்றத்தில் வழக்கு

இந்நிலையில், பதவிக்காலம் முடிந்த செயற்குழு மூலம், ஓய்வுபெற்ற நீதிபதி இ.பத்மநாபனை தேர்தல் அலுவலராக நியமித்து தேர்தலை அறிவித்துள்ளது. இது சட்டவிரோதமானது என்றும், சங்க உறுப்பினர்கள் பலர் நீக்கப்பட்டுள்ளதால், முறையான வாக்காளர் பட்டியலைத் தயாரித்து நியாயமாக தேர்தலை நடத்த குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் நடிகர் ஏழுமலை, பெஞ்சமின் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.

மேலும், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து 61 உறுப்பினர்கள் அளித்தப் புகாரின் அடிப்படையில், நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்திவைக்க மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்தும், தேர்தலை நடத்தப் பாதுகாப்பு கோரியும் பொதுச்செயலாளர் என்ற முறையில் நடிகர் விஷால் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்குகளில் பதிவாளர் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தும், தேர்தலை நடத்தவும் அனுமதித்த நீதிமன்றம், வாக்கு எண்ணிக்கையை நடத்தக் கூடாது எனவும் உத்தரவிட்டது.

அதன்படி, திட்டமிட்டப்படி 2019, ஜூன் 23ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்படி, வாக்கு எண்ணிக்கை நடத்தப்படாமல், வாக்குப்பெட்டிகள் வங்கி லாக்கரில் வைக்கப்பட்டன.

நாளை முதல் வாக்கு எண்ணிக்கை

இதற்கிடையில், ஜூன் 23-இல் நடத்தப்பட்ட தேர்தலில் வாக்குரிமை மறுக்கப்பட்டதாகக் கூறி, நடிகர் சங்கத்துக்கு நடத்தப்பட்ட தேர்தலை ரத்து செய்யக்கோரி நடிகர் சங்க உறுப்பினர்கள் ஏழுமலை, பெஞ்சமின் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பாக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைத்து நீதிபதிகள் விசாரணை மேற்கொண்டனர். நடிகர் சங்கத்தின் அனைத்து வழக்குகளின் தீர்ப்பும் கடந்த மாதம் பிப்ரவரி 23ஆம் தேதி வழங்கப்பட்டது.

அதில், நடிகர் சங்கத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைகளை 3 வாரத்திற்குள் நடத்த வேண்டும் எனவும் 4 வாரத்திற்குள் மேல்முறையீடு செய்யலாம் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதையடுத்து, நடிகர் சங்கத்தின் மேல்முறையீடு மனு உச்ச நீதிமன்றத்தில் கடந்த மார்ச் 16ஆம் தேதி ரத்து செய்யப்பட்ட நிலையில், நாளை (மார்ச் 20) நுங்கம்பாக்கத்தில் உள்ள குட்-ஷெப்பர்ட் பள்ளியில் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி அளவில் தொடங்க உள்ளது.

இதில், 24 செயற்குழு உறுப்பினர்கள், ஒரு தலைவர், 2 துணைத் தலைவர்கள், ஒரு பொருளாளர் மற்றும் ஒரு பொதுச் செயலாளர் ஆகிய பதவிகள் என மொத்தம் 29 பதவிகளுக்கான வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

இதையும் படிங்க:'நெல்சன் வேற மாறி..!': கலகலப்பான ’ஜாலியோ ஜிம்கானா’ பிரோமோ

Last Updated : Mar 20, 2022, 6:51 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.