ETV Bharat / sitara

'நோயற்ற வாழ்வே, குறைவற்ற செல்வம் என்பதை உணர்த்தும் நேரம் இது' - கமல் அறிவுறுத்தல் - கரோனா தொற்று பரவாமல் இருப்பதற்கு வீட்டிலேயே இருக்க கமல் அறிவுறுத்தல்

எப்போதும் வேலை வருமானம் என்று ஓடிக்கொண்டிருப்பதைவிட, நமது உயிர் முக்கியம் என்பதை நீங்கள் உணர வேண்டும். ஆகையால் இந்த இரண்டு வாரங்கள் நம் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான நாள்கள். இதனை நம் எப்படிப் பயன்படுத்தி நம்மை தற்காத்துக்கொள்ள வேண்டும் என்பதை இந்த 14 நாள்களில் நாம் கடைப்பிடிக்கும் பழக்கமே முக்கியம் எனப் பொதுமக்களுக்கு வேண்டுகோள்விடுத்துள்ளார் கமல்ஹாசன்.

Kamal urges public to stay indoor
Kamal video on Coronavirus outbreak
author img

By

Published : Mar 21, 2020, 2:34 PM IST

சென்னை: நோயற்ற வாழ்வே, குறைவற்ற செல்வம் என்பதை வழக்கத்துக்கு கொண்டுவரும் நேரம் இது என்று கூறி நடிகர் கமல்ஹாசன் கரோனா தொற்றிலிருந்த தற்காத்துக்கொள்வது தொடர்பாகக் காணொலி வெளியிட்டுள்ளார்.

கரோனோ வைரஸ் பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்வது தொடர்பாக இரண்டு காணொலிகளை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். அதில், அரசு அறிவித்துள்ள நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ள அவர், ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் ஒரு சின்ன இடைவெளியைப் பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்டுள்ள காணொலியில் அவர் கூறியிருப்பதாவது:

கரோனா வைரஸ் பாதிப்பு நான்காவது, ஐந்தாவது வாரங்களில் பன்மடங்கு அதிகமாவதைப் பல நாடுகளில் பார்க்கிறோம். வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டிருக்கிறோம் எனத் தெரியாத சிலர் பொது இடங்களில் உலாவருவார்கள். பாதிப்படைந்தது ஐந்து பேர் என்றால் அவர்கள் மூலம் 25 பேருக்கும் பரவுகிறது. அது மேலும் 100 பேர் வரை பரவாமல் தடுக்க வேண்டுமென்றால் சோசியல் டிஸ்டன்சிங் எனப்படும் விலகி இருத்தலைக் கடைப்பிடிக்க வேண்டும்.

அதிகபட்ச விழிப்புணர்வு தேவைப்படும் நான்காவது வாரத்தில் தற்போது தமிழ்நாடு உள்ளது. எனவே கூட்டம் கூடும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்திடுங்கள். அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வீட்டைவிட்டு வெளியே வாருங்கள். இப்படிச் செய்வதன் மூலம் கரோனா தொற்று பரவாமலும், உங்களிடமிருந்து நெருக்கமானவர்களுக்குப் பரவாமலும் தவிர்க்கலாம்.

Kamal video on Coronavirus outbreak

கரோனா தொற்று இருந்தாலே உயிருக்கு ஆபத்து என்றில்லை. ஆனால் சிலருக்கு அவர்கள் உடல்நிலையைப் பொறுத்து ஆபத்தாக மாறலாம்.

எனவே விலகியிருந்து குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவழியுங்கள். மனதுக்குப் பிடித்தவர்களோடு போனில் மனம்விட்டுப் பேசுங்கள், ஆனால் அனைவரும் ஒன்றாகச் சந்திக்க வேண்டாம். நம்மால் வேறொருவருக்குப் பாதிப்பு ஏற்படாதவாறு பொறுப்புடன் நடந்துகொள்ளுங்கள்.

நமக்கு வராது என்று கண்மூடித்தனமான நம்பிக்கையாலும், அசட்டு தைரியத்தாலும் இந்த நோய் பரவ நாம் காரணமாக இருந்துவிடக் கூடாது. முன்னெச்சரிக்கை முக்கியமான விஷயம் என்று கூறியிருக்கிறார்.

இதைத்தொடர்ந்து மற்றொரு காணொலியில், வீட்டில் இருந்தால் வருமானத்துக்கு என்ன செய்வது, குழந்தைகளுக்கு பள்ளிக்கட்டணம் செலுத்த வேண்டும், வேலை என்னாகும், குழந்தைகளின் படிப்பு என்னாகும், தொழில் என்னாகும் என்ற உங்களது நியாயமான பயம், கவலைகளை ஒதுக்கிவைத்துவிடுங்கள். இவை எல்லாவற்றையும் செய்வதற்கு நீங்கள் உயிருடன் இருக்க வேண்டும். வரும் இரண்டு வாரங்களை எப்படிச் செலவிடுவது என்று யோசியுங்கள்.

Kamal urges public to stay indoor

வேலை, தொழில் என ஓடிக்கொண்டிருந்த ஆளாக நீங்கள் இருந்தால் அவற்றை விடுத்து உங்களது இத்தனை நாள் அனுபவங்கள், நீங்கள் செய்ய நினைத்த விஷயங்களை உங்கள் குழந்தைகளுடன் பகிருங்கள். எந்திரமாக ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் ஒரு சின்ன இடைவெளி கிடைத்துள்ளது. அதைச் சரியாகப் பயன்படுத்துங்கள். வீட்டிலேயே இருங்கள், பத்திரமாக இருங்கள்.

நோயற்ற வாழ்வே, குறைவற்ற செல்வம் என்பதை வழக்கத்துக்கு கொண்டுவரும் நேரம் இது.

இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: 'அனைவரும் மக்கள் ஊரடங்குக்கு ஒத்துழைக்க வேண்டும்' - கமல்ஹாசன்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.