உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கோர் உயிரிழந்துள்ளனர். இந்த தொற்றை கட்டுப்படுத்த பல நாடுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி வருகின்றன. மேலும் இந்த வைரஸூக்கு பல நாடுகள் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் வேலைகளில் முழுவீச்சாக இறங்கியுள்ளன.
இதனையடுத்து 'கரோனா வரைஸ்' குறித்து திரைப்படம் ஒன்றை இயக்குநர் ராம்கோபால் வர்மா தயாரித்துள்ளார். கரோனா வைரஸ் என தலைப்பிடப்பட்டிருக்கும் அந்த படத்தை ராம்கோபால் வர்மா - அகஸ்திய மஞ்சு ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர்.
கரோனா வைரஸ் திரைப்படத்தின் ட்ரெய்லரை ராம்கோபால் வர்மா தனது சமூகவலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நான்கு நிமிடங்கள் ஓடும் இந்த ட்ரெய்லரில், ஊரடங்கு நேரத்தில் வீட்டில் இருக்கும் நபருக்கு கரோனா வந்து விடுகிறது. இதனை வீட்டில் இருக்கும் நபர்கள் அவரை எவ்வாறு எதிர்கொள்கின்றனர் என்பதை த்ரில்லர் பாணியில் காட்டப்பட்டுள்ளது.
இந்த ட்ரெய்லர் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "கரோனா வைரஸ் குறித்து நம் அனைவரின் மத்தியிலும் உள்ள அச்சத்தை பற்றிய படம். இது தொற்று பாதிக்கப்பட்டவரின் நோய் - இறப்புக்கும் இடையே நம்மை சுற்றி இருப்பவர்களின் அன்பை பற்றியது.
-
Here is the CORONAVIRUS film trailer..The story is set in a LOCKDOWN and it has been SHOT during LOCKDOWN ..Wanted to prove no one can stop our work whether it’s GOD or CORONA @shreyaset https://t.co/fun1Ed36Sn
— Ram Gopal Varma (@RGVzoomin) May 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Here is the CORONAVIRUS film trailer..The story is set in a LOCKDOWN and it has been SHOT during LOCKDOWN ..Wanted to prove no one can stop our work whether it’s GOD or CORONA @shreyaset https://t.co/fun1Ed36Sn
— Ram Gopal Varma (@RGVzoomin) May 26, 2020Here is the CORONAVIRUS film trailer..The story is set in a LOCKDOWN and it has been SHOT during LOCKDOWN ..Wanted to prove no one can stop our work whether it’s GOD or CORONA @shreyaset https://t.co/fun1Ed36Sn
— Ram Gopal Varma (@RGVzoomin) May 26, 2020
'கரோனா வைரஸ்' கதை லாக்டவுனில் உருவாக்கப்பட்டு இந்த காலக்கட்டதிலேயே படமாக்கப்பட்டது. எங்கள் வேலையை கடவுள் அல்ல அந்த கரோனாவே நினைத்தாலும் தடுக்க முடியாது என்பதை இது நிரூபித்துள்ளது" என ட்வீட் செய்துள்ளார். ட்ரெய்லரில் படம் வெளியாகும் தேதி குறிப்பிடபடவில்லை.
அதுமட்டுமல்லாது கரோனா வைரஸ் குறித்து உலகில் எடுக்கப்பட்ட முதல் திரைப்படம் இதுவாகும். இதுவரை இப்படத்தின் ட்ரெய்லரை 15 லட்சத்துக்கும் அதிகமானோர் கண்டுகளித்துள்ளனர்.
இதையும் படிங்க: மியாவின் கவர்ச்சி உச்சகட்ட 'க்ளைமேக்ஸ்' - ட்ரெய்லரை வெளியிட்ட ராம்கோபால் வர்மா