ETV Bharat / sitara

கௌதமி வீட்டின் கரோனா நோட்டீஸ்: முகவரி குழப்பத்தில் கமல் அலுவலகத்தில் ஒட்டிய மாநகராட்சி!

சென்னை: நடிகை கௌதமி வீட்டை தனிமைப்படுத்தப்பட்ட வீடாக அடையாளப்படுத்துவதற்கு பதிலாக கமலின் கட்சி அலுவலகத்தில் கரோனா நோட்டீஸ் ஒட்டியதால் குழப்பம் ஏற்பட்டது.

கௌதமி வீட்டின் கரோனா நோட்டீஸ் விவகாரம்
கௌதமி வீட்டின் கரோனா நோட்டீஸ் விவகாரம்
author img

By

Published : Mar 28, 2020, 1:34 PM IST

கரோனா பெருந்தொற்று பரவாமல் தடுப்பதற்கு மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் வெளிநாடு சென்று தாயகம் திரும்பியவர்களின் வீட்டில் ’இந்த இல்லம் தனிமைப்படுத்தப்பட்ட இல்லம்’ என அரசு சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுவருகிறது.

இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் அமைந்திருக்கும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல் ஹாசன் அலுவலகத்திற்கு வெளியே ’தனிமைப்படுத்தப்பட்ட இல்லம்’ என மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. சிறிது நேரத்தில் அந்த நோட்டீஸை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர். இதனிடையே, அந்த விவகாரம் விஸ்வரூபமெடுத்து செய்திகளாக பரவியது. அதனை மறுத்து கமல் ஹாசனும் அறிக்கை வெளியிட்டார்.

கரோனா நோட்டீஸ்
கரோனா நோட்டீஸ்

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் தெரிவித்தபோது, சமீபத்தில் நடிகை கௌதமி வெளிநாடு சென்று தமிழ்நாடு திரும்பியுள்ளார். அதனால் அவரது இல்லத்தில், தனிமைப்படுத்தப்பட்ட இல்லமென நோட்டீஸ் ஒட்டப்பட வேண்டும் என்பதால், அவரது கடவுச்சீட்டில் இருந்த முகவரியை வைத்து மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டியது. ஆனால், கௌதமி கடவுச்சீட்டில் கமல் ஹாசனின் கட்சி அலுவலகம் முகவரி இருந்ததால், இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது என விளக்கமளித்தார்.

தற்போது, நடிகை கௌதமி அங்கு இல்லை என்பதால் நோட்டீஸ் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.

கௌதமி வீட்டின் கரோனா நோட்டீஸ் விவகாரம்
இதையும் படிங்க: 2 வாரங்களாக தனிமை: கமல் ஹாசன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.