தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதில் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் சமீப காலமாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்தவகையில் நடிகை மீனாவின் குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கு கரோனா தொற்றின் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், "2022ஆம் ஆண்டில், எனது வீட்டிற்கு வந்த முதல் பார்வையாளர் கரோனா.
என் முழு குடும்பத்தையும் அது பிடித்துள்ளது. ஆனால், அதை நான் இருக்க விடப்போவதில்லை. மக்கள் அனைவரும் ஜாக்கிரதையாகவும், பாதுகாப்பாகவும் இருங்கள். எங்களுக்காக அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் செய்தி மீனா ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நடிகர் அருண் விஜய்க்கு கரோனா பாதிப்பு