’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் டைட்டில் பட்டத்தை வென்ற கனி, எப்போது சமூக வலைதளங்களில் படு ஆக்டிவ்வாக செயல்படுகிறார்.
இவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடிக்கொண்டு இருந்தார். அப்போது அவரிடம் நீங்கள் ஏன் தாலி அணிவதில்லை? என ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த கனி, "தமிழ் கலாசாரத்தில் தாலி அணிவது என்ற ஒன்று இல்லை. அது இடையில் வந்ததுதான். மாலை மாற்றி இவர்தான் எனக்கு என மனதார ஏற்றுக் கொண்டாலே போதும்.
என் கணவர் மஞ்சள் கயிற்றில் கட்டிய தாலி இன்னும் என்னிடம் இருக்கிறது. திருமணத்திற்கு என் கணவர் கட்டிய தாலியை உறவினர்கள் மாற்றிவிட்டு, வேறு தாலியை போட்டனர். அதில் எனக்கு உடன்பாடில்லை.
எங்கள் உறவின் அடையாளமாக ஒரு மகன் இருக்கிறான்" எனக் கூறியுள்ளார். தாலி குறித்து கனி கொடுத்த விளக்கத்தை கேட்டு அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: 'என்னை மன்னித்துவிடு பவானி' - உயிரிழந்த தோழியை நினைத்து உருகும் யாஷிகா