ETV Bharat / sitara

ரஜினியை கிண்டல் செய்த இயக்குநர் ராம் கோபால் வர்மா?

author img

By

Published : Oct 8, 2020, 8:12 AM IST

சென்னை: ரஜினியை கிண்டல் செய்யும் வகையில் இயக்குநர் ராம் கோபால் வர்மா வெளியிட்டுள்ள போஸ்டர் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராம் கோபால் வர்மா
ராம் கோபால் வர்மா

இந்தி, தெலுங்கு, கன்னடா ஆகிய மொழிப் படங்களில் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளராக வலம் வருபவர், ராம் கோபால் வர்மா. எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், அடிக்கடி தனது ட்விட்டர் பக்கத்தில் திரைப்படம், அரசியல், விளையாட்டு என அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் குறித்து சர்ச்சையான பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஆர்ஜிவி மிஸ்ஸிங்'. இப்படத்தின் போஸ்டரை நேற்று(அக்.07) இயக்குநர் ராம் கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதில், 'ஆர்ஜிவி படத்தின் புதிய நடிகர் கஜினிகாந்த் இவர்தான்.

இவரைப் பார்த்து வேறு யாரோ போன்று தெரிந்தால் அது முற்றிலும் தற்செயல்' என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் போஸ்டரில் இருக்கும் நடிகர், ரஜினிகாந்த் போல் உள்ளார். அதனால் ரஜினிகாந்தை, ராம் கோபால் வர்மா கிண்டல் செய்துள்ளார் என்று கூறி, அவரது ரசிகர்கள் ராம் கோபால் வர்மாவை கடுமையாகச் சாடி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஓடிடி தளத்தில் வெளியாகும் 'தந்துவிட்டேன் என்னை'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.