ETV Bharat / sitara

மாடல் அழகி மீரா மிதுன் மீது வழக்குப்பதிவு!

சென்னை: 'மிஸ் தமிழ்நாடு' எனும் அழகிப்போட்டி நடத்தி பண மோசடி செய்ததாக நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன் மீது சென்னை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மீரா மிதுன்
author img

By

Published : Jun 3, 2019, 5:36 PM IST

மிஸ் சவுத் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அஜித் ரவி, ஜோ மைக்கேல் பிரவீன் ஆகியோர் கொலை மிரட்டல் விடுப்பதாக, மே 30ஆம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகையும் மாடல் அழகியுமான மீரா மிதுன் புகார் அளித்தார். இதையடுத்து தென்னிந்திய அழகிப் பட்டம் மீரா மிதுனிடமிருந்து பறிக்கப்பட்டது.

இது குறித்து மிஸ் சவுத் இந்தியா நிர்வாகிகள் கூறுகையில், 'மிஸ் தமிழ்நாடு 2019' என்ற நிகழ்ச்சியை நடத்த மைக்கேல் பிரவீன் என்பவர் உரிமம் பெற்றிருந்தார். ஆனால் இந்த தலைப்பை தவறாக பயன்படுத்தி மீரா மிதுன் நிகழ்ச்சி நடத்தினார். ஆடை வடிவமைப்பாளர்கள், மாடல் அழகிகள் ஆகியோரிடம் பணம் வசூலித்து மோசடி செய்ததாக தேனாம்பேட்டை மற்றும் எழும்பூர் காவல் நிலையங்களில் மீராமிதுன் புகார் கொடுப்பதற்கு முன்னதாகவே வழக்கு பதிவு செய்துள்ளோம், என்றார்.

மோசடி வழக்கில் மிஸ் தமிழ்நாடு, மிஸ் சௌத் இந்தியா பட்டம் பெற்ற அழகி மீது காவல் நிலையங்களில் புகார்* 

மிஸ் தமிழ்நாடு என்ற அழகிப் போட்டி நடத்தி மோசடி செய்வதாக நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன் மீது சென்னை காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது

கடந்த 30 ஆம் தேதி நடிகையும் மாடல் அழகியுமான மீரா மிதுன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் மிஸ் சவுத் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அஜித் ரவி மற்றும் ஜோ மைக்கில் பிரவீன் என்பவர் மீது கொலை மிரட்டல் புகார் கொடுத்திருந்தார். தான் நடத்தும் மிஸ் தமிழ்நாடு திவா 2019 நிகழ்ச்சியை தடுக்க மிரட்டுவதாகவும் கூறியிருந்தார்.  அன்றைய தினமே தென்னிந்திய அழகிப் பட்டம் மீரா மிதுனிடமிருந்து பறிக்கப்பட்டது. அதற்கு மிஸ் சவுத் இந்தியா நிர்வாகம் விளக்கமளித்து இருந்தது. அதில் மிஸ் தமிழ்நாடு 2019 நிகழ்வை நடத்த ஜோ மைக்கேல் பிரவீன் என்பவரை உரிமம் பெற்றதாகும். அந்த தலைப்பை தவறாக பயன்படுத்தி மீரா மிதுன் நிகழ்ச்சி நடத்துவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறிப்பாக ஆடை வடிவமைப்பாளர்கள் இடமும் மாடல் அழகிகள் இடமும் பணம் வசூலித்து மோசடி செய்ததாக தேனாம்பேட்டை மற்றும் எழும்பூர் காவல் நிலையங்களில் மீராமிதுன்  புகார் கொடுப்பதற்கு முன்னதாகவே அளித்துள்ளதாக ஜோ மைக்கேல் பிரவின் தெரிவித்துள்ளார். இதை மறைத்து தன் மீதும், அஜித் ரவி மீதும் கொலை மிரட்டல் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.மிஸ் தமிழ்நாடு 2019 நிகழ்ச்சியை கடந்த மார்ச் மாதம்  நடத்தபோவதாக அறிவித்ததாகவும்,இந்த அழகி போட்டியை செப்டம்பர் மாதம் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில்,அவசர அவசரமாக மீராமிதுன் அறிவித்து இன்று நடத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார்.இவ்வாறு மிஸ் தமிழ்நாடு 2019 தலைப்பை தவறாக பயன்படுத்தும் மீராமிதுன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

பேட்டி
ஜோ மைக்கேல் ப்ரவீன்
மல்லிகா மலர்கொடி
மாடல் அழகி
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.