தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் சதீஷ். தனது எதார்த்தமான நகைச்சுவை மூலம் ரசிகர்கள் மனதில் தனி இடத்தை பிடித்துள்ளார். இவர், அடிக்கடி ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்படும் நகைச்சுவையான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், இவர் கூடைப்பந்து விளையாடும் போது எடுக்கப்பட்ட நகைச்சுவையான வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில், சதீஷ் காலால் பந்தை எட்டி உதைத்து கூடைக்குள் போடுவது போலவும், திரும்பிப் பார்க்காமல் போடும் பந்து சரியாக கூடைக்குள் விழுவதும் இடம்பெற்றுள்ளது. இவரின் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிறது.