பா.இரஞ்சித் இயக்கத்தில் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள படம் 'சார்பட்டா பரம்பரை'. இதில் ஆர்யா, துஷாரா, பசுபதி, கலையரசன் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வடசென்னையில் இருந்த குத்துச்சண்டையை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்தில் நடித்த அனைத்து நடிகர்களின் கதாபாத்திரமும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது. சார்பட்டா பரம்பரை, இடியாப்ப பரம்பரை, கபிலன், வேம்புலி, டான்ஸிங் ரோஸ், டாடி, மாரியம்மா என கதாபாத்திர பெயர்களை சொல்லியே அந்த நடிகர்களை ரசிகர்கள் அழைக்கிறார்கள்.
இந்நிலையில் இந்த குத்துச்சண்டை குறித்து கடந்த 70களில் வெளியான 'திருடன்' என்ற படத்தில் நடிகர் நாகேஷ் பேசும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
அதில் இரண்டு பெண்கள் நடுத்தெருவில் சண்டையிட்டுக்கொள்ளும் காட்சியில் ஒருவர் சார்பட்டா பரம்பரை மற்றொருவர் இடியாப்ப பரம்பரை என்றும் ரோசமான சண்டை என கூறுகிறார்.
மேலும் உட்கார்ந்து பார்த்தால் பத்து பைசா நின்றுகொண்டு பார்த்தால் ஐந்து பைசா என்கிறார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகியுள்ளது.