தமிழ்திரை உலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாராவின் படங்கள் சமீபகாலமாக தொடர் வெற்றியடைந்து வருகின்றன. இந்நிலையில், நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருகின்றனர். இவர்கள் எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என திரையுலகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது அதற்கான தகவல் வெளியாகியுள்ளது.
ஆம், பிரபல ஜோதிடர் ஒருவர் நயன்தாராவின் திருமணம் எப்போது என்பதை கணித்துள்ளார். அதன்படி இருவரது திருமணம் இந்தாண்டு நடைபெறும் என அவர் கணித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக இருவரும் காதலித்து வரும் நிலையில், ஜோதிடர் கணிப்பு சரியாக இருக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
முன்னதாக இந்த ஜோதிடர், சமீபத்தில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து, நியுசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதியில் மோதும் என்றும், இறுதி போட்டியில் நியுசிலாந்து- இங்கிலாந்து அணிகள் மோதும் எனக் கணித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.