திரைப்பட உலகம் மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. திரையிடல் தொழில்நுட்பம் 70 எம்மில் தொடங்கி தற்போது, முப்பரிமாணத்துடன் கூடிய ‘3டி’ அமைப்புகளுடன் தயாரிக்கப்பட்டு திரைக்கு வருகின்றன. இப்படத்தை 3டி கண்ணாடி அணிந்து மட்டுமே பார்க்க முடியும். வெரும் கண்களால் பார்த்தால் அதற்குரிய ஸ்பெஷல் எஃபெக்டை அனுபவிக்க முடியாது.
அனால், இனி வரும் காலங்களில் முப்பரிமாண படங்களை 3டி கண்ணாடி அணிந்து பார்க்கத் தேவையில்லை , அதற்காக தற்போது வந்துள்ளது ஸ்கிரீன் எக்ஸ் (SCREEN- X) திரையிடல், இதைப் பார்ப்பதற்கு பார்வையாளர்களைச் சுற்றி காட்சி நிகழ்வது போன்ற உணர்வைத் தருமாம். இந்த சினிமா 270 டிகிரி கோணத்தில் பார்க்காலம். ஒரே காட்சியை ஒரே நேரத்தில் 3 கேமராக்களில் பலவித கோணங்களில் பார்க்க முடியும். எனவே, இனி 3டி கண்ணாடிகள் அணியாமல் 3டி படங்களை பார்க்க முடியும்.
அடுத்த மாதம் இரண்டாம் தேதி வெளியாகவுள்ள ஸ்பைடர்மேன் - ஃபார் ஃப்ரம் ஹோம் (Spider-Man: Far From Home) படம் உலகிலே முதல்முதலாக ஸ்கிரீன் எக்ஸ் வடிவில் திரையிடப்படவுள்ளது. உலக அரங்கில் இப்படத்திற்கு பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.