ETV Bharat / sitara

ட்விட்டரில் மீண்டும் மாஸ்காட்டிய 'மாஸ்டர்' - மகிழ்ச்சியில் ரசிகர்கள் - மாஸ்டர் லேட்டஸ் செய்திகள்

சமூக வலைதளமான ட்விட்டரில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் தொடர் சாதனைகளை நிகழ்த்திவருகிறது.

master
master
author img

By

Published : Dec 14, 2020, 1:59 PM IST

தமிழ் ரசிகர்களிடையே சமூக வலைதளங்களில் முக்கியமான ட்விட்டர் தனி இடத்தைப் பெற்றுள்ளது. இதில்தான் ரசிகர்கள், நடிகர்களுக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்து பதிவிட்டு அவ்வப்போது சண்டையிட்டுவருவர். இந்த வருடம் கரோனா அச்சுறுத்தல் காரணமாக வீட்டியிலேயே முடங்கியிருந்த ரசிகர்களுக்கு சமூக வலைதளங்களே பெரும் ஆறுதலாக இருந்தன.

2020ஆம் ஆண்டு முடிவடைய இன்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில் ட்விட்டர் தளத்தில் இந்தாண்டு திரையுலகில் சாதனைபுரிந்த ஹேஷ் டேக்குகள், நடிகர், நடிகைகள், படங்களின் பெயர்கள் குறித்தான விவரங்களை ட்விட்டர் இந்தியா நிறுவனம் சில தினங்களாக அறிவித்துவருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு 'மாஸ்டர்' படப்பிடிப்பு தளத்தில் விஜய் எடுத்த செல்ஃபி அதிகமாக ரீ-ட்வீட் செய்த புகைப்படம் என்றும் #Soorarai Pottru இந்தாண்டு அதிகமாக ஹேஷ்டேக் செய்யப்பட்டது என்றும் அறிவித்தது. இன்று தென்னிந்திய சினிமா பிரபலங்களின் படங்கள், அதிகம் ட்வீட் செய்தவர்கள், திரைப் பிரபலங்களின் ட்வீட் உள்ளிட்ட பட்டியலை வெளியிட்டுள்ளது.

அந்தப் பட்டியலில் இந்தாண்டு ரசிகர்களால் அதிகம் ஹேஷ் டேக் செய்யப்பட்ட படத்தின் பட்டியலில் 'மாஸ்டர்' முதலிடத்தில் உள்ளது. மூன்றாம் இடத்தில் வலிமை உள்ளது. ஐந்தாம் இடத்தில் சூரரைப் போற்று உள்ளது. ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் பத்தாம் இடத்தில் உள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்த வருடம் பிரபலங்கள் அதிகப்படியான ட்வீட்கள் செய்யப்பட்ட பட்டியலையும் வெளியிட்டுள்ளது. அதில், முதலிடத்தில் மகேஷ் பாபுவும் மூன்றாவது இடத்தில் விஜய்யும் உள்ளனர். இந்தப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் சூர்யாவும் எட்டாவது இடத்தில் தனுஷும் உள்ளனர்.

நடிகைகள் பட்டியலில், கீர்த்தி சுரேஷ் முதலிடத்தைப் பிடித்து சாதனை புரிந்துள்ளார். இவரைத் தொடர்ந்து, காஜல் அகர்வால், சமந்தா, ராஷ்மிகா, பூஜா ஹெக்டே, டாப்ஸி, தமன்னா, ரகுல் ப்ரீத் சிங், ஸ்ருதி ஹாசன், த்ரிஷா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த அறிவிப்பையடுத்து விஜய் ரசிகர்கள் #MasterTopsTwitter2020 என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து கொண்டாடிவருகின்றனர்.

இதையும் படிங்க: ட்விட்டரில் மாஸ் காட்டிய 'மாஸ்டர்'... ட்ரெண்டான 'சூரரைப் போற்று': கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.