சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் நடிக்க முன்னணி நடிகைகள் ஆர்வம் காட்டுகின்றனர். எத்தனை நாள் தான் கதாநாயகனுடன் டூயட் பாடிக்கொண்டு இருப்பது என்று நினைத்து, தங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படத்தின் கதைகளைத் தேர்வு செய்து நடிக்கின்றனர்.
நயன்தாரா தொடங்கி ஐஸ்வர்யா ராஜேஷ் வரை இந்த பட்டியல் நீள்கிறது. அந்த பட்டியலில் தற்போது புதிதாக நடிகை ராய் லட்சுமி இணைந்திருக்கிறார். ’சிண்ட்ரெல்லா’ என பெயரிடப்பட்டுள்ள வைக்கப்பட்டுள்ள இந்த படம், முழுவதும் பேண்டசி வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
எஸ்ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய, வினோ வெங்கடேஷ் இப்படத்தை இயக்கியுள்ளார். இதில் ரோபோ சங்கர், சாக்ஷி அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பேய் படமாக இருந்தாலும் வழக்கமான பாணியில் உருவாக்காமல் விறுவிறுப்பான பாணியில் படம் நகரும் என இயக்குநர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நேற்று (ஆக.23) திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த மாதம் இப்படம் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காகப் படக்குழு முழு வீச்சில் இறங்கியுள்ளது.
இதையும் படிங்க : லைகா தயாரிப்பில் வடிவேலு?