’THE NEWCOMERS' திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் கிறிஸ் ஈவான்ஸ். அதை தொடர்ந்து ’தி பெர்ஃபெக்ட் ஸ்கோர்’, ஃபியர்ஸ் பீப்பிள் போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்தார். இவர் பல சின்னதிரை தொடர்களிலும் நடித்துள்ளார்.
மேலும் கேப்டன் அமெரிக்கா படத்தில், ஸ்டீவ் ரோஜர்ஸ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து இவர் ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்துவிட்டார்.
இந்நிலையில் கிறிஸ் ஈவான்ஸ் இன்று தனது 40ஆவது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதனையொட்டி அவருக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதனால் #HBDChrisEvans, #HBDCAPTAIN ஆகிய ஹேஷ்டேக்குகள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.