ETV Bharat / sitara

விக்ரம் - துருவ் விக்ரம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

மூன்றாவது முறையாக விக்ரம் - சிம்ரன் ஜோடி, முதல் முறையாக விக்ரம் - துருவ் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் இந்தப் படத்தில் இசையமைப்பாளராக அனிருத்துக்கு பதில் சந்தோஷ் நாரயணன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

vikram and dhruv vikram
விக்ரம் மற்றும் துருவ் விக்ரம்
author img

By

Published : Mar 10, 2021, 2:18 PM IST

சென்னை: கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று (மார்ச் 10) தொடங்கியுள்ளது.

பொன்னியின் செல்வன், கோப்ரா ஆகிய படங்களை முடித்துவிட்டு அடுத்ததாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கவுள்ள படத்துக்கு விக்ரம் தேதிகளை ஒதுக்கியுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை 'சியான் 60' என அழைத்து வருகிறார்கள்.

'கோப்ரா' படத்தை தயாரித்த லலித் குமாரே இந்தப் படத்தையும் தயாரிக்கவுள்ளார். அனிருத் இசையமைப்பதாக இருந்த இந்தப் படத்துக்கு தற்போது சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கவுள்ளார். முன்னதாக படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டபோது அனிருத் இசையமைப்பார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இசையமைப்பாளர் மாற்றப்பட்டுள்ளார்.

aniruth replaced by santhosh narayanan
விக்ரம் படத்தில் அனிருத்துக்கு பதிலாக சந்தோஷ் நாரயணன் இசையமைக்க ஒப்பந்தம்

விக்ரமுடன் முதன்முறையாக அவருடைய மகன் துருவ் விக்ரமும் இந்தப் படத்தில் இணைந்து நடிக்கவுள்ளார். இந்தப் படத்தில் இருவர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இதில் ஒருவராக தற்போது வாணி போஜன் ஒப்பந்தமாகியுள்ளார்.

இதைத்தொடர்ந்து மற்றொரு கதாநாயகிகாக, நீண்ட தேடலுக்குப் பிறகு இறுதியில் சிம்ரன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

vikram selfie with simran
சிம்ரனுடன் நடிகர் விக்ரம் செஃல்பி

முன்னதாக 'பிதாமகன்' படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் விக்ரமுடன் நடனமாடியிருந்தார் சிம்ரன். இதைத்தொடர்ந்து கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் 'துருவ நட்சத்திரம்' படத்தில் சிம்ரன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படம் நீண்ட வருடங்களாகத் தயாரிப்பில் உள்ளது. இந்த இரண்டு படங்களுக்குப் பிறகு விக்ரம் - சிம்ரன் இணைந்து நடிக்கும் படமாக 'சியான் 60' அமைந்துள்ளது.

படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.

இதையும் படிங்க: ’உங்களுடன் நெருக்கமாக, இதை எல்லாம் செய்தேன்?’ - ஏ.எல். விஜய் குறித்து கங்கனா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.