தமிழ்நாட்டின் முதலமைச்சராக முதல்முறையாக பொறுப்பேற்ற திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்குப் பல்வேறு அரசியல் கட்சியினர், திரைப் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் விக்ரம், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேற்று (மே.08) நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின் போது விக்ரமின் மருமகனும் உடன் சென்று, ஸ்டாலினிடம் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: சில நேரங்களில் வாழ்க்கை உண்மையிலேயே நியாயமற்றது: சோனு சூட்