தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 152ஆவது படமான 'ஆச்சார்யா' படத்தை கொரட்லா சிவா இயக்குகிறார். இப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். ராம்சரணின் கோணிடெலாவும், மேட்னி என்டர்டெயின்மென்ட்டும் இணைந்து பெரும் பொருள்செலவில் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பிற்காக பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அரங்கில்தான் படத்தின் 80 விழுக்காடு படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டிருந்தது. இதற்கிடையில் கரோனா தொற்று அச்சம் காரணமாக நடைபெற்றுவந்த படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கப்பட்டது. ஆனாலும் இப்படம் குறித்தான எந்த அப்டேட்களும் வராததால் ரசிகர்கள் படக்குழுவினரிடம் சமூக வலைதளங்கள் வாயிலாகத் தொடர்ந்து கேட்டுக்கொண்டே வந்தனர்.
-
Witness our Vintage Megastar as ACHARYA! #AcharyaTeaser#Acharyahttps://t.co/mbMRFZKiJV pic.twitter.com/jz7js8n9gm
— Ram Charan (@AlwaysRamCharan) January 29, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Witness our Vintage Megastar as ACHARYA! #AcharyaTeaser#Acharyahttps://t.co/mbMRFZKiJV pic.twitter.com/jz7js8n9gm
— Ram Charan (@AlwaysRamCharan) January 29, 2021Witness our Vintage Megastar as ACHARYA! #AcharyaTeaser#Acharyahttps://t.co/mbMRFZKiJV pic.twitter.com/jz7js8n9gm
— Ram Charan (@AlwaysRamCharan) January 29, 2021
இந்நிலையில் இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. வழக்கம்போல் தெலுங்கு சினிமாக்கே உரித்தான அதிரடி காட்சிகள், தப்பைத் தட்டிக் கேட்கும் நாயகன் என டீசரில் சிரஞ்சீவி மாஸ் காட்டியுள்ளார்.
இந்த டீசர் வெளியானதையடுத்து சிரஞ்சீவியின் ரசிகர்கள் ட்விட்டரில், #Acharya, #AcharyaOnMay13 என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்துவருகின்றனர். மேலும் இப்படம் மே 13ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.