ETV Bharat / sitara

வீட்டில் இருக்கும் குழந்தைகள் போர் அடிப்பதை மாற்ற இதை செய்யுங்கள் - மானஸ்வி - கரோனா விழிப்புணர்வு வீடியோ

"என்னைப் போன்ற குழந்தைகள் வீட்டில் இருப்பதனால் போர் அடிக்கும் என்று நினைக்காதீர்கள். வெளியில் சென்றால் மட்டும் தான் சந்தோஷமாக இருக்க முடியும் என்பது இல்லை. வீட்டில் இருந்தபடியே நிறைய ஆக்டிவிட்டீஸ் செய்யலாம்" என்று குழந்தை நட்சத்திரமான மானல்வி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். .

Manasve
Manasve
author img

By

Published : Mar 26, 2020, 6:55 PM IST

இந்தியாவில் வேகமாக பரவிவரும் கரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக இந்திய அரசங்கம் தேசிய ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் வீட்டிற்குள்ளே முடங்கியுள்ளனர்.

குழந்தை நட்சத்திரம் மானஸ்வியின் விழிப்புணர்வு வீடியோ

வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு போர் அடிக்காமல் இருப்பதற்கு சில ஆக்டிவிட்டீஸை குழந்தை நட்சத்திரம் மானஸ்வி கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், என்னைப் போன்ற குழந்தைகள் வீட்டில் இருப்பதனால் போர் அடிக்கும் என்று நினைக்காதீர்கள். வெளியில் சென்றால் மட்டும் தான் சந்தோஷமாக இருக்க முடியும் என்பது இல்லை. வீட்டில் இருந்தபடியே நிறைய ஆக்டிவிட்டீஸ் செய்யலாம். டிராயிங் வரையலாம், ஸ்கெட்ச் பண்ணலாம், அதேபோன்று பெற்றோர்களும் வீட்டிலிருந்தபடியே குழந்தைகளுக்கு புது விஷயங்களை சொல்லித் தரலாம். குழந்தைகளுடன் விளையாடலாம். கதை சொல்லலாம்.

வீட்டை விட்டு போக கூடாது என்று அரசு ஏன் கூறுகிறது என்றால் உங்களுக்கு எந்த பிரச்னையும் வரக்கூடாது என்பதற்காகத்தான். பெற்றோர்கள் முன்பு அலுவலகத்திற்கு சென்று விடுவார்கள். ஆனால் இப்போது அதிக நேரம் உள்ளதால் என்போன்ற குழந்தைகளுக்கு நிறைய நல்ல விஷயங்களை கற்றுக் கொடுங்கள்.

நாம் வெளியில் சென்றால் கண்ணுக்குத் தெரியாத கரோனா வைரஸ் நம் மீது தொற்றிக்கொள்ளும் அது நமக்கு தெரியாது. பொருட்கள் வாங்குவதற்கு கடைக்குச் சென்றாலும் மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும். அப்படி வெளியில் சென்றாலும் வீட்டிற்கு வந்தவுடன் கால் கைகளை நன்றாக கழுவ வேண்டும்.

நாம் சுத்தமாக இருந்தால் போதாது வீட்டையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். தயவு செய்து அனைவரும் வீட்டிலேயே இருங்கள் இது என்னுடைய வேண்டுகோள் என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.