சேரன் தனது திரைப்படங்களில் நல்ல கருத்துகளை சொல்லிவந்தது போலவே பிக்பாஸ் வீட்டிற்குள்ளும் போட்டியாளர்களுக்கு ஒழுக்க நடவடிக்கைகளை சொல்லிவந்தார்.
மற்ற போட்டியாளர்கள் சிலர் ஆரம்பத்தில் அவரை எதிர்த்தாலும் பின்னாட்களில் அவரை மெள்ள மெள்ள புரிந்துகொண்டனர். அவருக்கு வெளியிலிருந்தும் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. சகப் போட்டியாளர்களின் குடும்பங்களிலும் அவருக்கு பெரும் மதிப்பும் மரியாதையும் கிடைத்தது.
'பிக்பாஸ் சீசன் 3' முடிவடைந்த நிலையில் அதன் போட்டியாளர் இன்னும் ஒருவருடன் ஒருவர் தொடர்பில் இருந்து வருகின்றனர். ஒருபக்கம் சாண்டி, கவின், தர்ஷன் ஆகியோர் ஒன்றாகச் சுற்றி வருகின்றனர்.
தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் சகபோட்டியாளரான மதுமிதா வீட்டிற்குச் சேரன் சென்றுள்ளார். அப்போது அங்கு மதுமிதா விருந்து அளித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை மதுமிதா தனது சமூகவலைத்தளத்தில் வெளிட்டுள்ளார்.
மதுமிதா உள்ளே சென்றதிலிருந்து மற்ற போட்டியாளர்களிடம் சிறு சிறு மனக்கசப்பு ஏற்பட்டு தன் கருத்தை நிரூபிப்பதற்காக தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டார். இது விதிமீறல் என்பதால் அவரை உடனடியாக பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றியதாக நிர்வாகம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.