மார்ச் மாத தொடக்கத்தில் இயக்குநர் சேரன் நடித்து இயக்கிய 'திருமணம்' திரைப்படம் தமிழகமெங்கும் வெளியானது. இதில் கதாநாயகனாக தம்பிராமையாவின் மகன் உமாபதி ராமையா, நாயகியாக காவ்யா சுரேஷ் நடித்திருந்தனர். இவர்களுடன் இயக்குநர் சேரன், தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், சுகன்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
குடும்பத்தில் நிலவும் உறவு பிரச்னைகள், நடைமுறை வாழ்வின் யதார்த்தங்கள், சென்டிமெண்ட் கொண்ட நல்ல கதை என்றஅருமையான விமர்சனங்களும் இப்படத்திற்கு கிடைத்திருந்தன.
ஆனால், அப்போது பள்ளி மாணவர்களுக்கு பொது தேர்வுகள் ஆரம்பித்திருந்தன. இதனால் மக்கள் பெருமளவில் திரையரங்கிற்கு வரவியலாத நிலையில், திரையிடுவதற்கு போதுமான திரையரங்குகளும் கிடைக்காததால் பல இடங்களில் இந்தப் படம் திரையிட முடியமால் இருந்தன.
இந்நிலையில், தற்போது ‘திருமணம்’ திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 12ஆம் தேதி, தமிழகமெங்கும் 75 திரையரங்குகளில் மறு வெளியீடு செய்யப்பட இருக்கிறது.