ETV Bharat / sitara

’நாடோடிகள் - 2’ வெளியீட்டுக்கு உயர் நீதிமன்றம் தடை

சென்னை: நாளை வெளியாகவிருந்த ’நாடோடிகள் - 2’ திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

film
film
author img

By

Published : Jan 30, 2020, 5:14 PM IST

நடிகர் சசிகுமார், நடிகை அஞ்சலி ஆகியோர் நடிப்பில், இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் ’நாடோடிகள் -2’ திரைப்படத்தை, தயாரிப்பாளர் நந்தகுமார் தயாரித்துள்ளார். இந்தத் திரைப்படம் நாளை வெளியாக இருந்தது. இந்நிலையில், இப்படத்திற்கு தடைவிதிக்கக்கோரி எஃப்.எம். நிதி நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

அந்த மனுவில், நாடோடிகள் படத்தின் தயாரிப்பாளர் நந்தகுமார், படத் தயாரிப்பு செலவுகளுக்காக தன்னை அணுகியபோது, படத்தின் தமிழ்நாடு, புதுச்சேரி உரிமையை அளிப்பதாகவும், அதற்காக ஐந்து கோடியே 25 லட்சம் ரூபாய் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல தவணைகளாக, மூன்று கோடியே 50 லட்சம் பணம் தயாரிப்பாளருக்கு வழங்கிய நிலையில், ஒப்பந்தத்தை மீறி வேறு நிறுவனம் மூலமாக படத்தை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வெளியிட, தயாரிப்பாளர் நந்தகுமார் நடவடிக்கைகள் எடுத்து வருவதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஒப்பந்தப்படி மீதமுள்ள ஒரு கோடியே 75 லட்சம் ரூபாயை அளிக்கத் தயாராக உள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே, படத்தின் தமிழ்நாடு, புதுச்சேரி உரிமையை தனக்கு அளிக்க உத்தரவிட வேண்டுமெனவும், அதுவரை படத்தை வெளியிடுவதற்கான ’கீ டெலிவரி மெசேஜ்’ஐ, திரையரங்குகளுக்கு தர ’கியூப்’க்கு தடைவிதிக்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.டி. ஆஷா, திரையரங்குகளில் ’நாடோடிகள் -2’ படத்தை வெளியிடுவதற்காக ‘கீ டெலிவரி மெசேஜ்’ தர ’கியூப்’ நிறுவனத்திற்கு இடைக்காலத் தடைவிதித்து உத்தரவிட்டார். மேலும், மனு தொடர்பாகப் பதிலளிக்க படத் தயாரிப்பாளருக்கும் உத்தரவிட்டு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க: ராதாரவிக்கு எதிராக களமிறங்கிய சின்மயி

Intro:Body:நாளை வெளியாகவுள்ள நடோடிகள் - 2 திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் சசிக்குமார், நடிகை அஞ்சலி ஆகியோர் நடிப்பில், இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில் நாடோடிகள் -2 திரைப்படத்தை தயாரிப்பாளர் நந்தகுமார் தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது.

இந்த படத்திற்கு தடை விதிக்க கோரி
எப்.எம்.பைனான்ஸ் நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அந்த மனுவில், நாடோடிகள் படத்தின் தயாரிப்பாளர் நந்தகுமார், பட தயாரிப்பு செலவுகளுக்காக தன்னை அணுகியபோது, படத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உரிமையை அளிப்பதாக 5 கோடியே 25 லட்சம் ஒப்பந்தம் மேற்கொள்ளபட்டதாக தெரிவிக்கபட்டுள்ளது. பல தவணைகளாக, 3 கோடியே 50 லட்சம் பணம் தயாரிப்பாளர்க்கு வழங்கிய நிலையில் வேறு நிறுவனம் மூலமாக படத்தைதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில்
வெளியிட தயாரிப்பாளர் நந்தகுமார் நடவடிக்கைகள் எடுத்து வருவதால் தனக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மனுவில் கூறியுள்ளார்.

ஒப்பந்தை மீறி படத்தை வெளியிட முயற்சிப்பது குறித்து தயாரிப்பாளரிடம் கேட்டதற்கு அவர் மழுப்பலான பதில் அளித்தாகவும், ஒப்பந்தபடி மீதமுள்ள 1 கோடியே 75 லட்சம் அளிக்க தயாராக உள்ளதாகவும் கூறியுள்ளார்.
படத்தின் உரிமை தனக்கே சொந்தமானது என அறிவிக்க வேண்டும் அதுவரை படத்தை வெளியிடுவதற்கான "கீ டெலிவரி மெசேஜ்" திரையரங்குகளுக்கு தர "கியூப்" க்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, திரையரங்குகளில் படத்தை வெளியிடுவதற்காக
"கீ டெலிவரி மெசேஜ்" தர கியூப் நிறுவனத்திக்கு தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் மனு தொடர்பாக பதில் அளிக்க பட தயாரிப்பாளருக்கு உத்தரவிட்டு விசாரணை இரண்டு வாரத்திற்கு தள்ளிவைத்தார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.