ETV Bharat / sitara

மலேசியாவில் தர்பார் படத்தை வெளியிட தடை!

சென்னை: ரஜினிகாந்தின் தர்பார் படத்தை மலேசியா தவிர மற்ற இடங்களில் வெளியிட அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

stay
stay
author img

By

Published : Jan 7, 2020, 4:14 PM IST

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகை நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள தர்பார் திரைப்படம் வரும் ஜனவரி 9ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இப்படத்திற்கு தடை விதிக்கக் கோரி, மலேசியாவைச் சேர்ந்த, டி.எம்.ஒய் கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதில், நடிகர் ரஜினிகாந்த நடித்த 2.0 படத் தயாரிப்பு பணிக்காக லைக்கா நிறுவனத்திற்கு 12 கோடி ரூபாயை கடனாக வழங்கியதாகவும், தற்போது வட்டியுடன் சேர்த்து 23 கோடியே 70 லட்சம் ரூபாயை வழங்க வேண்டி இருப்பதால், அந்தத் தொகையை வழங்காமல் ‘தர்பார்’ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

இவ்வழக்கு நீதிபதி ஜி. ஜெயசந்திரன் முன் இன்று விசாரணைக்கு வந்தபோது, லைக்கா நிறுவனம் தரப்பில் கடன் தொகை எதுவும் லைக்கா நிறுவனம் வழங்க வேண்டியது இல்லை எனவும், மனுதாரர்தான் தங்களுக்கு 1 கோடியே 45 லட்சம் ரூபாய் கொடுக்கவேண்டியுள்ளதாகவும், எனவே தர்பார் படத்திற்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனத் கோரப்பட்டது.

இதற்கு, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், தங்களுக்கு தரவேண்டியத் தொகைக்கு பதிலாக ’காலா’ படத்தின் சிங்கப்பூர் உரிமையை அளித்துள்ளதாக பதில் மனுவில் தெரிவித்துள்ளனர். ஆனால், அது போன்ற எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை எனத் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த லைக்கா நிறுவனத் தரப்பு வழக்கறிஞர், சிங்கப்பூர் வெளியீட்டு உரிமை அளித்ததற்கான ஒப்பந்த ஆதாரம் தங்களிடம் உள்ளதாகத் தெரிவித்தார்.

அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தர்பார் படத்தை மலேசியாவில் மட்டும் வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார். டி.எம்.ஒய். கிரியேஷன்ஸ் நிறுவனத்திற்கு 4 கோடியே 90 ஆயிரம் ரூபாயை டிபாசிட் செய்யும்பட்சத்தில், ஜனவரி 9இல் மலேசியாவிலும் தர்பார் படத்தை வெளியிடலாம் எனவும் லைகா நிறுவனத்திற்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: 'திரௌபதி' ஒரு வாழ்க்கைப் பாடம் - இயக்குநர் மோகன்.ஜி

Intro:Body:ரஜினிகாந்தின் தர்பார் படத்தை மலேசியா தவிர மற்ற இடங்களில் வெளியிட அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகை நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில், லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள தர்பார் திரைப்படம் வரும் ஜனவரி 9ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

இந்த படத்திற்கு தடை விதிக்க கோரி மலேஷியாவை சேர்ந்த டிஎம்ஒய் கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

நடிகர் ரஜினிகாந்த நடித்த 2.0 பட தயாரிப்பு பணிக்காக லைக்கா நிறுவனத்திற்கு, 12 கோடி ரூபாயை கடனாக வழங்கியதாகவும், அந்த தொகை தற்போது வட்டியுடன் சேர்த்து 23 கோடியே 70 லட்சம் ரூபாயை வழங்க வேண்டி இருப்பதால், அந்த தொகையை வழங்காமல் தர்பார் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயசந்திரன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, லைக்கா நிறுவனம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யபட்டது.

அதில், எந்த கடனும் லைக்கா நிறுவனம் வழங்க வேண்டியது இல்லை எனவும், மனுதரார் தான் தங்கள் நிறுவனத்திற்கு 1 கோடியே 45 லட்சம் அளக்க வேண்டும் என்பதால் தர்பார் படத்திற்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவிக்கபட்டது.

வழக்கு விசாரணையின் போது, மனுதரார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தங்களுக்கு தரவேண்டிய தொகைக்கு பதிலாக காலா படத்தின் சிங்கப்பூர் உரிமையை அளித்துள்ளதாக பதில் மனுவில் தெரிவித்துள்ளனர். ஆனால் அது போன்ற எந்த ஒப்பந்தம் செய்யவில்லை என தெரிவித்தார்.

லைக்கா நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தங்கள் நிறுவனம் பெற்ற கடனுக்கு காலா படத்தின் சிங்கப்பூர் வெளியிட்டு உரிமை அளித்ததாகவும் அதற்கான ஒப்பந்தம் எங்களிடம் உள்ளதாகவும் தெரிவித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி, தர்பார் படத்தை மலேஷியாவில் வெளியிட மட்டும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். டி.எம்.ஒய். கிரியேஷன்ஸ் நிறுவனத்திற்கு 4 கோடியே 90 ஆயிரம் ரூபாயை டிபாசிட் செய்ய வேண்டுமெனவும், அவ்வாறு பணத்தை செலுத்தும்பட்சத்தில் ஜனவரி 9ல் மலேஷியாவிலும் வெளியிடலாம் என லைகா நிறுவனத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.