ETV Bharat / sitara

கார் - பைக் ஸ்டண்ட்டுக்காக சுவிட்சர்லாந்துக்கு பறக்கும் 'வலிமை' படக்குழு - அஜித் வலிமை பட அப்டேட்

அஜித் நடிப்பில் உருவாகி வரும் 'வலிமை' படத்தின் கார் - பைக் ஸ்டண்ட் காட்சிகளுக்காக படக்குழு சுவிட்சர்லாந்து நாட்டிற்கு செல்லவுள்ளது.

ajith
ajith
author img

By

Published : Jan 30, 2020, 9:33 PM IST

'நேர்கொண்ட பார்வை' படத்திற்குப் பிறகு, 'தல' அஜித் மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார். 'வலிமை' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார்.

'வலிமை' படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் முடிந்த நிலையில், சென்னையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. 'மங்காத்தா', 'என்னை அறிந்தால்' படங்களுக்குப் பிறகு அஜித், 'வலிமை' படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்து வருவதால், ரசிகர்களுக்கு படத்தின் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது.

அது மட்டுமின்றி படத்தில் கார் ரேஸ், பைக் ரேஸ் போன்ற காட்சிகள் உள்ளன என்று படக்குழு வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்தது. இந்த நிலையில் 'வலிமை' படக்குழு கார் ரேஸ், பைக் ரேஸ் உள்ளிட்ட காட்சிகளை படமாக்குவதற்காக ஏப்ரல் மாதம் சுவிட்சர்லாந்து நாட்டிற்கு செல்ல முடிவு செய்துள்ளனர். இதற்காக போனி கபூர் சுவிட்சர்லாந்து சென்று அதற்கான சிறப்பு அனுமதிவாங்கியிருப்பதாக சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இப்படத்தை இந்த வருட தீபாவளிக்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

இதையும் வாசிங்க: விரைவில் அஜித்துடன் இணைந்து நடிப்பேன் - பிரசன்னா நம்பிக்கை

Intro:Body:

Car and Bike chasing scenes in Valimai movie in switzerland schedule 

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.