ETV Bharat / sitara

சிரஞ்சீவியின் 'காட்ஃபாதர்': ஓப்பனிங் சாங் பாடும் பிரிட்னி ஸ்பியர்? - லூசிஃபர் தெலுங்கு ரீமேக்

'லூசிஃபர்' படத்தின் தெலுங்கு ரீமேக்கான காட்ஃபாதர் படத்தில் பிரபல பாடகியான பிரிட்னி ஸ்பியர் பாடல் ஒன்று பாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Godfather
Godfather
author img

By

Published : Oct 13, 2021, 10:14 PM IST

தெலுங்கு மெகா ஸ்டார் சீரஞ்சீவி தனது 152 படமான 'ஆச்சார்யா'வில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை கொரட்லா சிவா இயக்குகிறார். ராம் சரணின் கோணிடெலாவும், மேட்னி என்டர்டெயின்மென்ட்டும் இணைந்து பெரும் பொருள்செலவில் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றது. பிப்ரவரி 4ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் இறுதி கட்டப்பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதனைத்தொடர்ந்து சிரஞ்சீவி, மோகன்லாலின் 'லூசிஃபர்' படத்தின் தெலுங்கு ரீமேக்கான காட்ஃபாதர் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் சிரஞ்சீவியின் 153ஆவது படமாகும். இயக்குநர் மோகன் ராஜா இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் ஹைதராபாத், ஊட்டி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது.

தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தையும் சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம் சரணின் கோணிடெலா நிறுவனம் தயாரிக்கிறது. இதனுடன் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறது.

காட்ஃபாதர் படத்துக்காக இசையமைக்கும் பணியை தமன் முழுவீச்சில் மேற்கொண்டுவருகிறார். இந்தநிலையில், காட்ஃபாதர் படத்தில் சிரஞ்சீவி பற்றிய ஒரு பாடலை பிரபல பாடகி பிரிட்னி ஸ்பியர் பாட வைக்க படக்குழு முயற்சி செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் சல்மான் கானை நடிக்க வைக்கவும் பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருவதாக தெரிகிறது. இருப்பினும் காட்ஃபாதர் படத்தில் பிரிட்னி ஸ்பியர், சல்மான் கான் ஆகியோர் இருக்கின்றனரா என்பது குறித்த எந்த தகவலையும் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

இதையும் படிங்க: 'லூசிஃபர்' தெலுங்கு ரீமேக்: மெகா ஸ்டாரை வைத்து இயக்கும் மோகன் ராஜா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.