ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது, தனது ஒப்பனை கலைஞருடான உறவு குறித்து பகிர்ந்தபோது, ஜீன் பிளாக் குடும்பமும், என் குடும்பமும் சகோதார, சகோதரி போன்று பழகக்கூடியவர்கள். என் வாழ்க்கையில் நான் மிகவும் மதிக்கும் நபர் என்றார்.
ஆஸ்கார் விருது வென்ற பிராட் பிட்டுடன் ஜீன் பிளாக் நாற்பது படங்களுக்கு மேல் அவருக்கான ஒப்பனைக் கலைஞராகப் பணிபுரிந்துள்ளார். கடந்த 1994ஆம் ஆண்டு வெளியான லெஜன்ட்ஸ் ஆஃப் தி ஃபால் (Legends of the Fall) என்ற படத்தில் ஜீன் பிளாக்கும், பிராட் பிட்டுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தைப் பகிர்ந்துக் கொண்டார். அதாவது, அப்படத்தில் பிராட் பிட்டின் பின்பகுதியில் ஒப்பனை செய்ய வேண்டும். அப்போது ஜீன் பிளாக்கும், அவருக்கும் அசெளகரித்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்பிறகு இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்க முடியாமல் தவித்ததாகக் கூறினார்.
இதையும் படிங்க: மீண்டும் சுவாரசியத்தை ஏற்படுத்திய பிராட் பிட் - ஜெனிபர் அனிஸ்டன் தம்பதியினர்