மகாராஷ்டிர மாநிலத்தில் குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு சோனு சூட் உதவுவது, ‘பாஜக எழுதிக்கொடுத்த திரைக்கதை’, இதன்மூலம் மாநில அரசாங்கம் சரியாக செயல்படாதது போல் சித்தரிக்க விரும்புகின்றனர் என சிவ சேனா தரப்பு விமர்சித்திருந்த நிலையில், நேற்று இரவு உத்தவ் தாக்கரேவை அவரது இல்லத்துக்கு சென்று சோனு சூட் சந்தித்துள்ளார்.
சிவ சேனா எம்பி சஞ்சய் ராவத், ‘சாமனா’ பத்திரிகையில் சோனு சூட்டை கடுமையாக விமர்சித்திருந்தார். திடீர் மகாத்மா சூட் என கலாய்க்கவும் செய்திருந்தார். 2019ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவுக்கு பரப்புரை மேற்கொள்ள ஒப்புக்கொண்ட நபர்தான் சோனு சூட் என அவர் எழுதியது குறிப்பிடத்தக்கது.
இப்படியான சூழலில், உத்தவ் தாக்கரே - சோனு சூட் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில், சோனு சூட்டின் செயல்பாடை உத்தவ் பாராட்டியுள்ளார்.