ETV Bharat / sitara

ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் பெண்ணா?- 'நோ டைம் டூ டை' பட தயாரிப்பாளர் விளக்கம்! - james bond

டேனியல் கிரேக்குப் பதிலாக பாண்ட் கதாபாத்திரத்தில், பெண் நடிக்கவுள்ளதாக வெளியான செய்தி குறித்து தயாரிப்பாளர் பார்பரா ப்ரோக்கோலி பேட்டியளித்துள்ளார்.

ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் பெண்ணா?- நோ டைம் டூ டை பட தயாரிப்பாளர் விளக்கம்!

author img

By

Published : Mar 9, 2020, 3:04 PM IST

உலக அளவில் புகழ்பெற்ற ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையில், 25ஆவது படமாக உருவாகியுள்ள படம் 'நோ டைம் டூ டை'. இதில் டேனியல் கிரேக், ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் ஐந்தாவது முறையாக பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டேனியல் கிரேக் பாண்டாக நடிக்கும் கடைசி திரைப்படம் இது தான் என்றும், இனிமேல் அவர் ஜேம்ஸ் பாண்ட் படத்தில் நடிக்கமாட்டார் என்று சில ஆண்டுகளாக வதந்தி பரவி வருகிறது. இருப்பினும், டேனியல் இது குறித்து எதுவும் வெளிப்படையாக வாய்திறக்கவில்லை.

இந்நிலையில் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் டேனியல் கிரேக் விலகிவிட்டால் அதில் ஒரு பெண் நடிப்பார் என்று ஒரு சில நாட்களாக சமூக வலைத்தளங்கில் கிசுகிசுக்கப்பட்டது. இதுகுறித்து ஜேம்ஸ் பாண்ட் பட தயாரிப்பாளர் பார்பரா ப்ரோக்கோலி பிரபல ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளார்.

அப்போது அவர் பேசியதாவது, '' 'நோ டைம் டூ டை' படத்திற்கு பிறகு டேனியல் கிரேக் இந்த கதாபாத்திரத்தைவிட்டு வெளியேறிவிட்டால், அவருக்குப் பதிலாக நடிக்கக்கூடியவர் மிகச்சிறந்த உளவாளியாக நடிப்பாரா என்றே பார்க்கப்படும். அது மட்டுமின்றி எந்த நிறத்தில் உள்ளார்கள் என்று பார்க்கப்படமாட்டார்கள்.
பாண்ட் எந்த நிறத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் ஆண் மட்டுமே பாண்ட் கதாப்பாத்திரத்திற்கு தேர்தெடுக்கப்படுவர். ஒரு ஆண் கதாபாத்திரத்தை நீக்கிவிட்டு, பெண்ணை அதில் நடிக்க வைப்பதில் எங்கள் குழுவுக்கு விருப்பமில்லை" என்று தெரிவித்துள்ளார்.

இதன்முலம் பாண்ட் கதாபாத்திரத்தில் பெண் நடிக்கமாட்டார் என்பது உறுதியாகியுள்ளது. மேலும் 'நோ டைம் டூ டை' திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தமிழில் ஹீரோ, தெலுங்கில் சக்தி: தூள்கிளப்பும் ட்ரெய்லர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.