ETV Bharat / sitara

ரக்ஷித் ஷெட்டியின் '777 சார்லி' ஒப்பந்தமான பாபி சிம்ஹா - பாபி சிம்ஹா பிறந்தநாள்

ரக்ஷித் ஷெட்டி நடிப்பில் உருவாகிவரும் '777 சார்லி' படத்தில் பாபி சிம்ஹா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Charlie
Charlie
author img

By

Published : Nov 6, 2020, 4:06 PM IST

அறிமுக இயக்குநர் ரமணன் புருஷோத்தமா ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் இயக்கிவரும் 'வசந்த முல்லை' படத்தில் பாபி சிம்ஹா நடித்துவருகிறார். இதில் பாபி சிம்ஹாவுடன் காஷ்மீரா பர்தேஷி நடித்துள்ளார். இப்படத்தை எஸ்.ஆர்.டி. என்டர்டெய்ன்மென்ட் - முத்ராஸ் பிலிம் ஃபேக்டரி இணைந்து தயாரிக்கிறது.

இதனைத்தொடர்ந்து பாபி சிம்ஹா கிரண்ராஜ் கே இயக்கும் ரக்ஷித் ஷெட்டியின் '777 சார்லி' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Charlie
777 சார்லி பட போஸ்டர்

பாபியின் கதாபாத்திரம் குறித்து ரக்ஷித் கூறுகையில், '777 சார்லி' படத்தில் வடநாட்டில் குடியேறிய ஒரு தென்னிந்தியரின் காதாபாத்திரம் முக்கியமாக இருக்கிறது. இது குறித்து இயக்குநர் என்னிடம் கூறும்போது, எனக்கு பாபி சிம்ஹா நினைவில் வந்தார். நான் அவரை அணுகுமாறு இயக்குநரிடம் பரிந்துரைத்தேன். இப்போது பாபிசிம்ஹாவை படக்குழுவினர் ஒப்பந்தம் செய்துள்ளனர். பாபி சிம்ஹாவுடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியான ஒன்று என்று கூறினார்.

படக்குழுவினர் தற்போது இமாச்சலப் பிரதேசம், காஷ்மீரில் இறுதி கட்ட படப்பிடிப்பிற்கான தளத்தை தேர்வு செய்து கொண்டிருக்கின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே ஏறக்குறைய முடிவடைந்த நிலையில், நவம்பர் 20ஆம் தேதி முதல் எஞ்சியுள்ள படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. கன்னடம், தமிழில் உருவாகும் இப்படம் அடுத்தாண்டு மார்ச் மாதம் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.