தெலுங்கு மொழி திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர், நடிகை பிந்து மாதவி. இதனையடுத்து தமிழ் மொழிப் படங்களில் அதிக கவனம் செலுத்தி, தற்போது வரிசையாகப் பல திரைப்படங்களைக் கைவசம் வைத்துள்ளார்.
பின்னணி இன்றி:
எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாத இவர், சரவணா ஸ்டோர்ஸ் உள்ளிட்ட விளம்பரத்தில் நடித்து தனது சொந்த முயற்சியில் முன்னேறி வந்துள்ளார். இதனையடுத்து அவர் பிக்பாஸ் 1 சீசனில் கலந்துகொண்டு, தனது நேர்மையான குணம் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களைப் பெற்றுள்ளார்.
பிந்து மாதவி பட பாடல்கள்:
'கழுகு' படத்தில் நா.முத்துக்குமார் எழுதிய 'கிட்ட வந்து நீயும் பேசும்போது, கிட்டத் தட்ட கண்ணு வேர்த்துப் போகும்’ என்ற வரி அப்படியே அவரின் கண்களை மனதில் வைத்துக் கொண்டு எழுதியது போலவே பிரதிபலிக்கும்.
சிரிப்பு அழகி:
'கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தில் 'கொஞ்சும் கிளி பாட வெச்சா' பாடலில் பிந்துவின் சிரிப்பும், யுகபாரதியின் வரிகளும் பிரமாதமாக அமைந்து ரசிகர்களைச் சிலிர்க்க வைத்தது.
அன்றிலிருந்தே பலரும் அவரின் சிரிப்புக்கு அடிமையாகிவிட்டனர்.
#HBDBINDUMADHAVI:
நடிகை பிந்து மாதவி இன்று தனது 35ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதனையொட்டி அவருக்கு ரசிகர்கள், திரையுலகப் பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் #HBDBINDUMADHAVI, #HBDBINDU என்ற ஹேஷ் டேக்கும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.