விஜய் - அட்லி கூட்டணியில் தீபாவளி விருந்தாக வெளியான திரைப்படம் 'பிகில்'. பெண்களின் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் விஜய் பயிற்சியாளராக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார்.
இதில் விஜய் முதன் முறையாக அப்பா - மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். அப்பா விஜய்யாக வந்த ரயப்பன் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
மேலும் இத்திரைப்படத்தில் கதிர், இந்துஜா, ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு எனப் பல்வேறு நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு கலவையான விமர்சனம் கிடைத்து வருகிறது.
இந்நிலையில் இயக்குநர் அட்லி தனது சமூக வலைதளத்தில் பிகில் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். நேற்று விஜய் அணிந்திருந்த பிகில் 5 ஜெர்சியை போலவே அட்லியும் @LEE 5 என்ற ஜெர்ஸி அணிந்த புகைப்படத்தை வெளியிட்டார். இதைப் பார்த்த பாடலாசிரியர் விவேக், 'இதெல்லாம் அநியாயம். எனக்கும் என் பிள்ளைக்கும் ஜெர்ஸி பார்சல் ப்ரோ' எனப் பதிவிட்டிருந்தார்.
தற்போது 'பிகில்' படத்தில் தொடக்கத்தில் வரும் சண்டைக்காட்சியின் போது விஜய்யுடன் அட்லி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: