ETV Bharat / sitara

BB Day 19: அபிஷேக்கின் நரி தந்திரங்களால் குழப்பம்... உடையுமா பிக்பாஸ் குடும்பம்? - லேட்டஸ்ட் சினிமா செய்திகள்

பஞ்சதந்திரம் டாஸ்க் தொடங்கிய நாள் முதல் அபிஷேக் செய்த நரி தந்திரங்களால் போட்டியாளர்களிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

அபிஷேக்கின் ராஜ தந்திரங்களால் ஏற்படும் குழப்பம்

author img

By

Published : Oct 22, 2021, 11:42 AM IST

பிக்பாஸ் 19 ஆம் நாள் அக்‌ஷராவோடு தொடங்குகிறது. பிரியங்கா கேங் தன்னை டார்கெட் செய்வதாகக் கூறி ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்த நிலையில், எங்க இவரு பரணி போல சுவர் ஏறி குதித்துவிடுவாரோ என நினைத்து கன்ஃபெஷன் ரூமிருக்கு அழைத்தார் பிக்பாஸ்.

நான் நானாக இல்லை, வீட்டிற்குப் போக வேண்டும் என பிக்பாஸிடம் ஒப்பாரி வைத்தார் அக்‌ஷரா. உடனே பிக்பாஸ் அவருக்கு ஆதரவு சொல்ல வேண்டும் என, 'நீங்கள் நன்றாக விளையாடி வருவதாகவும், அப்படியே விளையாடுங்கள்' என்றார்.

மாஸ்டர் பிளான் போடும் பிரியங்கா கேங்

இப்படி பிக்பாஸிடம் அக்‌ஷரா அழுது ஒப்பாரி வைக்க, மற்றொரு பக்கம் பிரியங்கா கேங் மாஸ்டர் பிளானில் ஈடுபட்டுள்ளனர். பிரியங்கா, நிரூப், அபிஷேக் கூட்டாக அமர்ந்து டாப் ஐந்து இடத்தில் வர பிளான் போட்டுக்கொண்டிருந்தனர். அடுத்தவர்களை எப்படி கீழே தள்ளிவிட்டு சதி வேலை செய்து மேலே வருவது என பிஸியாக பேசிக் கொண்டிருந்தனர்.

ஆலுமா டோலுமாவுடன் தொடங்கிய நாள்

பிக்பாஸ் 19 ஆவது நாள் தல அஜித் குமாரின் 'ஆலுமா டோலுமா' குத்து பாடலுடன் தொடங்கியது. குத்துப் பாடல் என்பதால், ஒருத்தர் விடாமல் வீட்டின் அனைத்து பகுதியிலும் நின்று நடனமாடினர். அபிஷேக் குழு காவாலித்தனம் செய்து ஐந்து நாணயங்களையும் கைப்பற்ற முயற்சி செய்துவருவதாக இமான், ராஜுவிடம் பேசிக் கொண்டிருந்தார். நாணயங்கள் வைத்திருக்கும் நபர்கள் அனைவரும் பிளாஸ்மா தொலைக்காட்சி முன்பு தாங்கள் காண்பிக்க வேண்டாம் என்றார் பிக்பாஸ்.

தாமரை - காற்று

வருண் - நீர்

நெருப்பு - இசைவாணி

பாவனி- ஆகாயம்

நிரூப் - நிலம்

அபிஷேக்கின் ராஜ தந்திரங்களால் ஏற்படும் குழப்பம்.
அபிஷேக்கின் நரி தந்திரங்களால் ஏற்படும் குழப்பம்.

இரண்டாம் கட்டப் போட்டி

நீர்- பாத்ரூம்

ஆகாயம்- லிவிங் டைனிங்

நெருப்பு - சமையல்

நிலம்- பெட்ரூம்

காற்று - கார்டன் ஏரியா

நாணயங்கள் வைத்திருப்பவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட இடங்களில் யாரையாவது அனுமதிக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு டாஸ்க் கொடுத்து அதை அவர்கள் செய்தபிறகு தான் விட வேண்டும் என்றார் பிக்பாஸ்.

இந்தப் பஞ்சதந்திரம் டாஸ்க் தொடங்கிய நாள் முதல், இவர்களைக் காப்பாற்றுவேன், அவர்களைக் காப்பாற்றுவேன் எனச் சொன்ன அபிஷேக் இறுதியாக மதுமிதாவை காப்பாற்றப் போவதாகக் கூறி கேங்கில் சேர்க்க முயன்றனர். பாத்ரூம் சென்ற பிரியங்கா, நாய் போல் நடித்து காண்பித்து, சோபாவில் அமர்ந்தார்.

அபிஷேக்கின் நரி தந்திரங்கள்

பஞ்ச தந்திரம் டாஸ்க்கில் தங்களுடைய கேங் தான் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தில் அபிஷேக் முழுவீச்சில் இறங்கிவிட்டார்.

இதற்காக வருணிடம், பாவனி குறித்து தவறாகப் பேசுவதும், பாவனியிடம், வருணைத் தப்பாகச் சொல்வது என்று தனது நரி தந்திரங்களைக் காண்பித்தார். இவரின் இந்த செயல் பார்வையாளர்களான நமக்கே சற்று எரிச்சலானது.

நெருப்பைக் கைப்பற்றும் முயற்சியில் அபிஷேக்

அபிஷேக்கை சாடிய ஸ்ருதி
அபிஷேக்கை சாடிய ஸ்ருதி

வருணை எப்படியும் வெற்றியடைய விட கூடாது என்று அபிஷேக் உறுதியாக இருந்தார். இதனால் இசையிடம் நெருப்பை நாணயத்தை பிடுங்கி கேமரா முன்பு காண்பித்தார்.

இருப்பினும் விடாமல், இசைவாணி அது தன்னுடையது எனக் கூறி மீண்டும் சமையல் ஏரியாவை தனது கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்தார். அபிஷேக்கின் திட்டம் ஸ்ருதிக்கு தெரியவர அவரவர் ஆட்டத்தை அவரவர் தான் விளையாட வேண்டும், 'நீ மூடிட்டு உன் வேலையே பாரு' எனக் கடுமையாக சாடினார்.

இப்படி அபிஷேக் செய்யும் நரி தந்திரங்கள் அனைத்தும் வீட்டிலிருக்கும் ஒவ்வொருக்கும் தெரியவருகிறது. அதனால் வரும் நாளில் கண்டிப்பாக பிக்பாஸ் வீட்டில் பஞ்சாயத்து ஏற்படப்போவது உறுதி.

இதையும் படிங்க: BB Day 16: நாணயத்தால் வெடித்த பூகம்பம்... சிதறிய போட்டியாளர்களின் ஒற்றுமை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.