மலேசியா நாட்டைச் சேர்ந்த முகென் ராவ் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ’பிக் பாஸ் 3’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். நிகழ்ச்சி தொடங்கிய புதிதில் மக்கள் மனதில் இடம்பிடிக்காத இவர், ஒரே ஒரு பாடல் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்துவிட்டார்.
இந்நிலையில் ’பிக் பாஸ் 3’ நிகழ்ச்சி முடிந்து ஒரு வருடம் ஆன நிலையில், தற்போது முகென் ராவின் முதல் திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி அவரது முதல் திரைப்படத்தை ’வெப்பம்’ திரைப்பட இயக்குநர் அஞ்சனா இயக்கவுள்ளார். சிரடி தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில், ஒளிப்பதிவாளராக ரத்தினவேல் பணியாற்றவுள்ளார்.
இதையும் படிங்க: ’பிக்பாஸ் 4’ தொடங்கும் தேதி வெளியீடு!