ETV Bharat / sitara

BB DAY 8: எதிர்பாராத கேப்டன்... நாமினேஷனில் நடந்த புதிய திருப்பம் - பிக்பாஸ்

பிக்பாஸ் வீட்டின் முதல் தலைவர் போட்டியில் யாரும் எதிர்பார்க்காதவிதமாக தாமரை செல்வி வென்று, இந்த வார நாமினேஷனிலிருந்து தப்பித்தார்.

பிக்பாஸ்
பிக்பாஸ்
author img

By

Published : Oct 12, 2021, 1:16 PM IST

பிக்பாஸ் ஐந்தாவது சீசன் தொடங்கி அதற்குள் ஒருவாரம் முடிந்துவிட்டது. எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை லாலா... என ஆடிப்பாடி சந்தோஷமாக இருந்த குடும்பத்திற்குள் உண்மையான கலவரம் தொடங்கும் நேரம் வந்துவிட்டது.

என்ன யோசிக்கிறீங்க... அட அதுதாம்பா இந்த வாரத்திலிருந்து நாமினேஷன் தொடங்குதுல! பிக்பாஸ் வீட்டில் நேற்று (அக். 11) இரண்டு முக்கியமான நிகழ்வுகள் நடைபெற்றன. ஒன்று தலைவர் போட்டிக்கான தேர்வு, மற்றொன்று முதல் நாமினேஷன். சரி, பிக்பாஸ் வீட்டில் எட்டாவது நாள் என்னென்ன நடந்தது என்பதைப் பார்க்கலாம் வாங்க மக்களே!

'வலி மாமே வலிப்... புளி மாங்கா புளிப்' என்ற பாடலுடன் எட்டாம் நாள் தொடங்கியது. பாட்டு சத்தம் கேட்டவுடன் வழக்கம்போல் போட்டியாளர்கள் தங்களது நாளை நடனத்துடன் தொடங்கினர்.

தாமரைக்குப் பாடம் எடுத்த பிரியங்கா

பிரியங்கா, இரவு ஆலோசனை வழங்கியதைக் கேட்டு, தாமரை செல்வி அப்போதுதான் பிக்பாஸ் விளையாட்டு என்றாலே என்ன என்று தெரிந்ததுபோல் ரியாக்ஷன் கொடுத்தார். (நம்புற மாதிரியா பாஸ் இருக்கு)

தாமரை செல்வி
தாமரை செல்வி

பின்னர் இமானிடம் சென்று பிரியங்கா சொன்ன பிறகுதான் எல்லாமே புரிந்தது என்றார். இனிமேதான் இந்தக் காளியோட ஆட்டத்தையே நீங்க பார்க்கப் போறீங்க என்ற அளவிற்கு இருந்தது அவரின் டயலாக் டெலிவரி. இமான் அண்ணாச்சி அதற்கு, 'நீ எப்போவும் இருக்கிற மாதிரியே இரு' எனக் கூற - அதற்கும் தலையை ஆட்டிவிட்டுச் சென்றார் தாமரை.

தலைவர் போட்டி

பிக்பாஸ் வீட்டின் முதல் தலைவர் போட்டிக்கான டாஸ்க் நடைபெற்றது. போட்டியாளர்களின் முதுகில் ஒரு பலூன் கட்டப்பட்டிருக்கும். பஸ்ஸர் அடிக்கும்போது, ஊசியை எடுத்து மற்றவர்களின் பலூனை உடைக்க வேண்டும். இறுதியாக யாருடைய பலூன் உடையவில்லையோ அவர்தான், இந்த வாரத் தலைவராகத் தேர்வுசெய்யப்படுவார் என பிக்பாஸ் தெரிவித்தார்.

தாமரை செல்வி - சின்ன பொண்ணு
தாமரை செல்வி - சின்ன பொண்ணு

பஸ்ஸர் அடித்தவுடன் நிரூப் ஓடிச்சென்று அனைவரையும் டார்கெட் செய்து பலூனை உடைத்தார். அவர்தான் தலைவராக வேண்டும் என்று நினைத்தாரா என்னவோ சோபாவின் மேலே பாய்ந்தெல்லாம் பலூனை உடைத்துக்கொண்டிருந்தார். (இவரைப் பார்த்தால் நமக்கு கடந்த சீசன் போட்டியாளர் பாலாஜிதான் நினைவுக்கு வருகிறார்).

இறுதியாக அவரே ஓடும்போது தனது பலூனை உடைத்துவிட, இறுதியாகத் தாமரைச் செல்வியும், சின்ன பொண்ணும் மட்டும் போட்டியில் இருந்தனர். அப்போது தாமரை செல்வி, 'நாடகமா, இசையா' பார்க்கலாம் வாங்க என அவரை டார்கெட் செய்தார்.

நிரூப்
நிரூப்

இதனால் கடுப்பான சின்ன பொண்ணு தன் பலூனை அவரே உடைத்துக்கொண்டார். இதன்மூலம் பிக்பாஸ் தாமரை செல்வி இந்த வாரத்தின் தலைவராக அறிவிக்கப்பட்டார். (எப்படியோ தலைவராகி இந்த வாரத்தின் நாமினேஷனிலிருந்து தப்பித்துவிட்டிங்களே தாமரை).

தலைவரானவுடன் பாத்திரம் தேய்ப்பது, கழிவறை சுத்தம் செய்வது, வீட்டை சுத்தம் செய்வது, சமையல் செய்யும் டீம்களைப் பிரித்தார் தாமரை.

கன்ஃபெஷன் ரூம்மில் வெளிவந்த உண்மை

எங்களுக்குள் சண்டையே வராது, நாங்க எல்லாம் ஒரே குடும்பம் என்று சந்தோஷமாக இருந்த இவர்களைப் பிரிக்கும் நேரம் வந்துவிட்டது. அதுதாம்பா நாமினேஷன். ஒவ்வொரு போட்டியாளரையும் கன்ஃபெஷன் ரூமிற்குள் அழைத்து, இந்த வீட்டிலிருந்து வெளியேற்ற விரும்பும் இரண்டு நபர்களின் பெயரைச் சொல்லுமாறு பிக்பாஸ் கேட்டார்.

உள்ளே சென்ற போட்டியாளர்கள் தங்களுக்குப் பிடிக்காத இரண்டு நபர்களின் பெயர்களை, காரணத்துடன் தெரிவித்தனர். போட்டியாளர்கள் ஒவ்வொரு நபரின் பெயரைச் சொன்னபோதுதான் தெரிந்தது - இவர்களுக்குள் இவ்வளவு விஷயங்கள் பிடிக்காமல் இருக்கின்றனவா என்று! அப்போ கன்ஃபெஷன் ரூம்மில் ஒரு நாடகம்; வீட்டில் ஒரு நாடகம்போல.

எதிர்பாராத நாமினேஷன்

போட்டியாளர்கள் தங்களது நாமினேஷனை முடித்தனர். இந்தமுறை ஒரு நபருக்கு ஒரு ஓட்டு விழுந்தால்கூட அவர்களை பிக்பாஸ் நாமினேஷன் பட்டியலில் இணைத்துவிட்டார்போல. 17 போட்டியாளர்களின் தாமரை செல்வி தலைவர் என்பதால் அவரை நாமினேஷன் பட்டியலில் எடுக்கவில்லை. பாவனி தவிர மற்ற 15 போட்டியாளர்களும் நாமினேஷனில் சிக்கிவிட்டனர்.

கமல் ஹாசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக். 10) இந்த ஒற்றுமை அடுத்த வாரத்தில்தான் தெரியவரும் என்று சொன்னது அனைவருக்கும் இப்போது புரிந்தது அல்லவா!

எதுக்கு ஒதுக்கறாங்க?

இசைவாணி, மதுமிதாவை அழைத்து, 'என்னை எதற்காக ஒதுக்குறாங்கன்னே எனக்குத் தெரியல? எனச் சோகமாகப் பேச உடனே மதுமிதா, 'உங்களை எனக்குப் பிடிக்கும். அதனால்தான் நானே வந்து பேசினன்’ என்று தனது கொஞ்சிபேசும் ஸ்டைலில் மதுமிதா சொன்னார். அப்படியா என இசைவாணி சந்தோசப்படுவதுடன் நிகழ்ச்சி முடிந்தது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.