ETV Bharat / sitara

BB Day 16: நாணயத்தால் வெடித்த பூகம்பம்... சிதறிய போட்டியாளர்களின் ஒற்றுமை - கமல்ஹாசன்

பிக்பாஸ் நிகழ்ச்சியின், 16 ஆவது நாளில் எதிர்பாராத பல சம்பவங்கள் போட்டியாளர்கள் மத்தியில் அரங்கேறின.

பிக்பாஸ்
பிக்பாஸ்
author img

By

Published : Oct 20, 2021, 1:38 PM IST

பிக்பாஸ் வீட்டில் கேங்கே இல்லை. பிரியங்கா மட்டும் தான் கேங் சேர்த்து அடுத்தவர்களைப் பழிவாங்கி வருகிறார் என்று போட்டியாளர்கள் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசினார்கள். ஆனால் உண்மையில் பிக்பாஸ் வீட்டில் யார் யார் எத்தனை பேருக்கு ஃபேவரைட்டிசம் செய்கின்றனர் என்பது நேற்றைய நிகழ்ச்சி மூலம் தெரியவந்தது.

புறணி பேசும் பிரியங்கா

பிக்பாஸ் 15 ஆவது நாள் இரவு ஷேவிங் க்ரீமை கீழே கொட்டி விளையாடிக் கொண்டிருந்த பிரியங்கா கேங், இரவு முழுவதும் தூங்காமல் யாரை எப்படிக் கவிழ்ப்பது என புறணி பேசிக் கொண்டிருந்தனர். 'நான் ஏன் சிபியை தலைவராக்கினேன்னா, ராஜு நாமினேஷனில் வருகின்றானா எனத் தெரிந்துகொள்ளவே செய்தேன்" எனப் பிரியங்கா, அபிஷேக்கிடம் கூறினார். இவர்கள் பேசுவதைப் பார்த்தால் என்னவோ, இவங்க தான் எல்லாத்தையும் பிளான் பண்ணி, செய்வதுபோல் இருந்தது.

'ஏ...சின்ன மச்சான்' பாடலை பிக்பாஸ் போட, அனைவரும் அதற்குள் விடிந்துவிட்டதா என சோம்பேறித்தனமாக, எழுந்துவந்து கை, காலை அசைத்தனர்.

இமானை வச்சி செய்த ராஜு

காலையில் எழுந்தவுடன் யாரையும் வம்பிழுக்கவில்லை என்றால் இவர்களுக்கு எளிதாக நாள் சென்றுவிடாது போல. இந்தமுறை இமான் சிக்கினார். ராஜு, இமானின் நடிப்பு திறமையைச் சோதித்துப் பார்க்கிறார். 'எங்க நீ அழுதுக்கிட்டே சிரி... சிரித்துக்கொண்டே அழு' என மாறி மாறி அவரை வச்சி செய்து சிரித்துக் கொண்டிருந்தார்.

அதிரடி ஆடி ஆஃபர்

அய்யோ இவங்க தொல்ல தாங்க முடியல என நேரடியாக பிக்பாஸ் இந்த வாரத்திற்கான லக்சரி பட்ஜெட் டாஸ்கிற்கு சென்றுவிட்டார். ஐந்து விலை மதிப்பில்லாத நாணயங்கள் கண்ணாடி பெட்டிகளில் வீட்டின் வெவ்வேறு ஏரியாவில் வைக்கப்படுகிறது.

இதைச் சாமர்த்தியமாகக் கைப்பற்றி கேமரா முன்பு காண்பிக்க வேண்டும். இதை வெற்றிகரமாகச் செய்பவர்கள், இந்த வார எலிமினேஷனிலிருந்து காப்பாற்றப்படுவார்கள் என அதிரடி ஆடி ஆஃபர் கொடுத்தார்.

இப்படிப்பட்ட ஆஃபர் கொடுத்துவிட்டு, Terms & condition இல்லையென்றால் எப்படி. நாணயம் கைப்பற்றும் போது, யாராவது பார்த்தால் அவர்கள் பாதாள சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என அறிவித்தார் பிக்பாஸ்.

முதல் திருட்டைத் தொடங்கிய ஐக்கி

ஒரு குழுவாக நாம் இணையாமல் இதை செய்யமுடியாது என தாமரை நல்ல யோசனை சொன்னார். இதுதான்டா சரியான நேரம் என காத்திருந்த போட்டியாளர்கள், தங்களுக்கு பிடித்தமான நபர்களை காப்பாற்ற முன்வந்தனர்.

இமான் அண்ணாச்சி, நான் உங்களை காப்பாற்றுகிறேன் என ஐக்கிக்கும், இசைவாணிக்கு ஆதரவாக நின்றார். இதனைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு முதல் திருட்டை ஐக்கி செய்தார். கேமராவில் தனது திருட்டை ஐக்கி பதிவு செய்துவிட்டு நாணயத்தை ஒளித்துவைத்தார். இதை எப்படியோ மோப்பம் பிடித்த அக்‌ஷரா பின்னாடியே சென்று நாணயத்தைத் திருடிவிட்டார்.

அபிஷேக்கின் தில்லு முல்லு

'நான் உங்களைக் காப்பாத்துறேன். நீங்க பயப்பட வேண்டாம் தாமரை' என டாயலாக் அடித்து வாசலிலிருந்த நாணயத்தைத் திருடி, சமையலறையில் ஒளித்துவைத்தார் அபிஷேக். இதை எப்படியோ ராஜு கண்டுபிடித்து தாமரையிடம், 'நீ யார் என்ன சொன்னாலும் நம்புவியா. நாணயம் எடுத்ததைப் பார்த்து நீ சத்தம் போடமால் இருந்தது தப்பு' என அறிவுரை வழங்கினார்.

பிக்பாஸ் அலாரம்

ஆளுக்கு ஒவ்வொரு திசையில் நாணயத்தைக் கைப்பற்றவும், எடுத்த நாணயத்தை மறைக்கவும் திணறிக்கொண்டிருந்தனர். அந்த நேரம் பார்த்து காது கிழியும் அளவிற்கு பிக்பாஸ் அலாரம் அடித்தது. 3 நாணயங்கள் காணவில்லை. 2 கைப்பற்றப்பட்டது என பிக்பாஸ் அறிவித்தார்.

குழப்பமான டாஸ்க்

இந்த டாஸ்க்கை போட்டியாளர்கள் சரியாக புரிந்துகொண்டார்களா என்றே தெரியவில்லை. குழுவாகச் செயல்பட பிக்பாஸ் அனுமதி கொடுக்கவில்லை. அதேபோல் நாணயம் எடுப்பதை, மற்றவர்கள் பார்த்தால் சிறைக்குச் செல்ல வேண்டும் என்றார். ஆனால் இவர்கள் என்னவோ ஒருவர் முன்பு தான் நாணயத்தை திருடவே செய்கின்றனர். அதுமட்டுமின்றி எடுத்ததை மாற்றிக்கொள்வது என குழப்பமாகவே இருந்தது நேற்றைய எபிசோட்.

'இந்த காரை வைத்திருந்த சொப்பன சுந்தரியை, இப்போது யார் வைத்திருக்கிறார்' என்ற நகைச்சுவை தான் நினைவுக்கு வந்தது.

பாவனி ஆட்டம்

பார்ப்பதற்குப் பூனை போல் அமைதியாக இருந்தாலும் டாஸ்க் என்றால் முழுவீச்சில் இறங்கி விடுகிறார் பாவனி. அங்கஇங்க ஓடி நாணயங்களைத் திருடி கேமரா முன்பு காண்பித்துவிட்டார். இவருக்கு உதவியாக அபினய் இருந்தார். கைப்பற்றிய இரண்டு நாணயங்களை இருவரும் கதவுக்கு அடியில் வைத்திருந்தனர். அதை பார்த்த நிரூப் ஓடிச் சென்று திருடுகிறார். இருப்பினும் அதை அபினய் பார்த்து கூச்சலிட்டதால், அவர் பாதாளச் சிறைக்கு அனுப்பப்பட்டார்.

எங்களுக்குள் சண்டையே வராது என போட்டியாளர்கள் தெரிவித்தனர். ஆனால் இந்த டாஸ்க் ஒன்று கொடுத்து, 'நீங்கள் யார் என்பதை நான் மக்களிடம் காண்பிக்கப் போகிறேன்' என பிக்பாஸ் அதிரடியாகக் களமிறங்கினார்.

இந்த வீட்டில் நாங்கள் குடும்பமாக இருக்கிறோம் என அனைவரும் நினைத்தனர். ஆனால் இந்த டாஸ்க் மூலம் போட்டியாளர்களின் ஒற்றுமை சிதறியது. டாஸ்க் இறுதியில் யார் யார் எப்படியெல்லாம் திருடினார்கள் என்பதை பிக்பாஸ் படமாக காண்பிக்கும் போது தெரியவரும் இவர்களின் வேஷம் அனைத்தும்.

இதையும் படிங்க: BB Day 15: எதிர்பாராத நாமினேஷன் பட்டியல்... எரிச்சலூட்டும் அபிஷேக்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.