தமிழ்த் திரையுலகில் பிரபல பாடகியாக வலம் வருபவர் ரம்யா என்.எஸ்.கே. இவர் , யுவன் ஷங்கர் ராஜா, இளையராஜா என தமிழில் முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்களை பாடியுள்ளார். இது தவிர பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
இவர் கடந்த ஆண்டு நடிகர் சத்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் ரம்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், ''நான் ஏன் எடை அதிகமாக இருக்கிறேன் என்று நிறைய பேர் என்னிடம் கேட்டார்கள். காரணம் இதுதான். எனக்கு குழந்தை பிறந்திருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.