அல்லு அர்ஜூன் நடிப்பில் பான் இந்தியா திரைப்படமாக வெளியான 'புஷ்பா' வசூலை வாரிக்குவித்து வருகின்றது. இத்திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சமந்தா உள்ளிட்ட நட்சத்திர ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.
குறிப்பாக சமந்தா நடனமாடிய 'ஓ சொல்றியா மாமா...' பாடல் இளசுகளை துள்ளச் செய்து வைரலாகியுள்ளது.
இந்தப் பாடலானது ஆண்களை இழிவுபடுத்தும் விதமாக எழுதப்பட்டிருப்பதாக, ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஆண்கள் சங்கம் சார்பில் வழக்கும் தொடரப்பட்டது. இத்திரைப்படத்தின் வெற்றிக்குக் கூட 'ஓ சொல்றியா மாமா' பாடலில், சமந்தாவின் கவர்ச்சி நடனமே காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
இப்படிப்பட்ட ட்ரெண்டிங் பாடலுக்கு பிக்பாஸ் புகழ் ஜூலி (Julie), தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் பதிவிட்டு ரசிகர்களை குதூகலமடையச் செய்துள்ளார். முன்னதாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த நெகட்டிவ் கேரக்டரால் புகழடைந்தவரே, ஜூலி.
பின்னர் சில நிகழ்ச்சிகளில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் வலம் வந்தார். படவாய்ப்பு ஏதும் இல்லாத காரணத்தால், கவனத்தை ஈர்க்கும் விதமாக சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார், ஜூலி.
சமீபத்தில் ஜூலி, அவரது காதலருக்கிடையேயான பிரச்னையில் காவல் நிலையத்தில் சமரசப் பேச்சுவார்த்தை நடந்தது. விசாரணையில் ஜூலி மீதே தவறிருந்ததும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து தற்போது 'ஓ சொல்றியா மாமா' பாடலுக்கு ஜூலி கவர்ச்சி நடனமாடியுள்ளது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: Athulya Ravi: 'அதுல்யாவுக்கு பச்சக்... பச்சக்...'; ரசிகரின் வெறித்தனம்!