ETV Bharat / sitara

ஒரு வாரம் ஓய்வு: விறுவிறுப்பாகக் களத்தில் இறங்கிய பீஸ்ட் படப்பிடிப்பு

author img

By

Published : Sep 1, 2021, 1:55 PM IST

நடிகர் விஜய் நடித்துவரும் பீஸ்ட் படத்தின் நான்காம் கட்ட படப்பிடிப்பு இன்றுமுதல் (செப்டம்பர் 1) சென்னையில் தொடங்கியுள்ளது.

பீஸ்ட்
பீஸ்ட்

நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துவரும் திரைப்படம் பீஸ்ட். இதில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க வில்லன் கதாபாத்திரத்தில் இயக்குநர் செல்வராகவன் நடித்துவருகிறார். சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தின் மூன்றாம்கட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் ஒன்றாம் தேதி தொடங்கிய நிலையில், 25 நாள்கள் சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் படப்பிடிப்பு நடைபெற்றது. அதில் விஜய்- பூஜா ஹெக்டே தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டன.

இந்நிலையில் பீஸ்ட் படத்தின் மூன்றாம்கட்ட படப்பிடிப்பு முடிந்து ஒரு வாரம் ஓய்வு எடுத்துக் கொண்ட படக்குழுவினர், நான்காம்கட்ட படப்பிடிப்பை இன்றுமுதல் மீண்டும் சென்னையில் தொடங்கியுள்ளனர்.

பீஸ்ட்
பீஸ்ட்

அதில் விஜய், செல்வராகவன் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டுவருகின்றன. இதனையடுத்து படக்குழு ஐந்தாம்கட்ட படப்பிடிப்பிற்காக 20ஆம் தேதி டெல்லி செல்கின்றனர். அங்கு ஐந்து நாள்கள் படப்பிடிப்பு நடைபெறுகிறது.

'பீஸ்ட்' திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அளவில் முதல் இடம் - பூமிகாவுக்கு கிடைத்த வரவேற்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.