ETV Bharat / sitara

பீஸ்ட் ஃபர்ஸ்ட் சிங்கிள் புரோமோ - வெளியான 24 மணிநேரத்தில் 8.2 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை - Vijay Beast movie Update

விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் டிராக் ரிலீஸ் அப்டேட் புரோமோ நேற்று (பிப். 7) மாலை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

பீஸ்ட் ஃபர்ஸ்ட் சிங்கிள் டிராக் ரிலீஸ் அப்டேட்!

author img

By

Published : Feb 8, 2022, 7:20 PM IST

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள திரைப்படம் ’பீஸ்ட்’. விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

அனிருத் இசையமைக்க, அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். விஜய்யின் ’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது,

இத்திரைப்படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகியவை கடந்த ஜூன் மாதம் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. இதையடுத்து பீஸ்ட் படத்தின் இறுதி நாள் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. தொடர்ந்து பீஸ்ட் படத்தின் அப்டேட்டுகளுக்காக ரசிகர்கள் காத்திருந்தனர்.

நேற்று (பிப்.7) மாலை 6 மணிக்கு பீஸ்ட் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாவதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தது.

இதையடுத்து பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு புரோமோ வெளியாகியுள்ளது. அதில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள், காதலர் தினமான பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த வீடியோ ஒன்றும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

அதில் 'அரபிக் குத்து' என்ற முதல் சிங்கிளுக்கான டிஸ்கஷன் போவது போல காட்டப்பட்டுள்ளது. அதன் வரிகளை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். இந்த காணொலி, வெளியான 24 மணிநேரத்தில் 8.2 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து, யூ-ட்யூப்பில் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகவெள்ளத்தில் மிதந்து வருகின்றனர்.

இதையும் படிங்க: 'பிக் பாக்கெட்' வேடமணிந்து காவலர்களிடத்தில் சிக்கி மீண்ட நடிகர் நிஷாந்த் ரூஸோ!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.