பிக்பாஸ் ஐந்தாவது சீசன் தொடங்கி ஒரு வாரம் வெற்றிகரமாகச் சென்றுவிட்டது. முதல் வாரம் என்பதால் போட்டியாளர்கள் அனைவரும் 'எங்கள் வீட்டில் எல்லா நேரமும் கார்த்திகை' என்று சந்தோஷமாக இருந்தனர்.
அவற்றை கெடுக்கும் வகையில் இன்றிலிருந்து (அக்டோபர் 11) தொடங்குகிறது நாமினேஷன் படலம். இந்த வீட்டில் அனைவரும் நல்லவங்கதான். ஆனால் நீங்க நல்லவங்க வேஷம் போடாமல் இருந்தால் எல்லாமே நல்லது என்று பிக்பாஸ் வசனத்துடன் இன்றைக்கான முதல் புரொமோ தொடங்குகிறது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
இசைவாணியை, அக்ஷரா, அபினய் நாமினேட் செய்கின்றனர். அக்ஷராவின் பெயரை அபிஷேக்கும், அபினய் பெயரை இமான் அண்ணாச்சியும் பரிந்துரை செய்கின்றனர். இந்தப் புரொமோ மூலம் இசைவாணிதான் முதல் நபராக பிக்பாஸ் வீட்டில் டார்கெட் செய்யப்படுகிறார் என்பது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: BB DAY 7: லைக், டிஸ்லைக் மூலம் பற்றவைத்த பிக்பாஸ்... தொடங்கும் புதுச்சண்டை