ETV Bharat / sitara

கரோனா வைரஸ் பாதிப்பு: பாகுபலி பிரபாஸ் நான்கு கோடி ரூபாய் நிதியுதவி - corona virus in india

கரோனா தொற்று நோயால் ஏற்பட்டுள்ள நெருக்கடியைப் போக்கும்வகையில் நடிகர் பிரபாஸ் 4 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

நான்கு கோடி ரூபாய் நிதி உதவி வழங்கிய பாகுபலி பிரபாஸ்

author img

By

Published : Mar 27, 2020, 8:38 AM IST

உலகெங்கும் கரோனா வைரஸ் தொற்று நோய் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 727ஆக அதிகரித்துள்ளது. இத்தொற்று நோய் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் நடிகர், நடிகைகள், சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் கரோனா தொற்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திவருகின்றனர்.

இந்நிலையில் 'பாகுபலி' பட நடிகர் பிரபாஸ், கரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடியைப் போக்கும் வகையில், பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு 3 கோடி ரூபாயும், ஆந்திரா, தெலங்கானா முதலமைச்சர்களின் நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாயும் நிதியுதவியாக வழங்கியுள்ளார். மொத்தம் 4 கோடி ரூபாய் கொடுத்த பிரபாஸை பலரும் பாராட்டியுள்ளனர்.

இதேபோல் பவன் கல்யாண் 2 கோடி ரூபாய், மகேஷ் பாபு 1 கோடி ரூபாய், நிதின் 20 லட்ச ரூபாய், ராம் சரண் 70 லட்ச ரூபாய், வருண் தேஜ் 10 லட்ச ரூபாயை ஆந்திரா மற்றும் தெலங்கானா முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர்.

இதையும் படிங்க: கரோனா நெருக்கடிக்கு 2 கோடி நிதியுதவி அளித்த பவர் ஸ்டார்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.