ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா தகுபதி, தமன்னா என பெரும் நடிகர் பட்டாளமே நடித்து இந்திய சினிமாவில் முக்கியமானதொரு படமாக பார்க்கப்பட்ட திரைப்படம் 'பாகுபலி-2'.
இந்தத் திரைப்படம் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டதை அடுத்து இரண்டாம் பாகமும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதற்கு காரணம் முதல் பாகத்தில் கிளைமேக்ஸில் இருந்த திருப்புமுனை. கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்? இந்தக் கேள்விக்கு பதிலை கண்டுபிடிக்கவே படத்தின் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் ஆர்வமுடன் பார்க்கச் சென்றனர்.
படத்தின் இரண்டாம் பாகம் மாபெரும் ஹிட் அடித்தது. படம் உலகெங்கும் பல்வேறு திரையரங்குகளில் திரையிடப்பட்டது. 1000 கோடி ரூபாய்க்கும் மேல் படம் பாக்ஸ் ஆபிஸில் வசூலை அள்ளியது.
சமீபத்தில் 'பாகுபலி-2' திரைப்படத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவை படக்குழு கொண்டாடியது. இந்நிலையில், 'பாகுபலி-2' திரைப்படம் ரஷ்ய மொழியில் டப் செய்யப்பட்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. இந்த செய்தி இந்தியாவின் ரஷ்ய தூதரகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் வெளியானது.
-
🎬 Indian cinema gains popularity in Russia. Look what Russian TV is broadcasting right now: the Baahubali with Russian voiceover! pic.twitter.com/VrIgwVIl3b
— Russia in India (@RusEmbIndia) May 28, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">🎬 Indian cinema gains popularity in Russia. Look what Russian TV is broadcasting right now: the Baahubali with Russian voiceover! pic.twitter.com/VrIgwVIl3b
— Russia in India (@RusEmbIndia) May 28, 2020🎬 Indian cinema gains popularity in Russia. Look what Russian TV is broadcasting right now: the Baahubali with Russian voiceover! pic.twitter.com/VrIgwVIl3b
— Russia in India (@RusEmbIndia) May 28, 2020
அந்த ட்விட்டர் பதிவில், 'ரஷ்யாவில் இந்திய சினிமா பிரபலமடைந்து வருகிறது. ரஷ்யன் தொலைக்காட்சி என்ன ஒளிபரப்பிக்கொண்டிருக்கிறது என்று பாருங்கள். ரஷ்யன் குரல் பதிவில் 'பாகுபலி' திரைப்படம்!' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க... 'பாகுபலி' உருவானது எப்படி? - காணாத புகைப்படங்கள் !