ETV Bharat / sitara

தெலுங்கில் ரீமேக்காகும் மலையாள சூப்பர் ஹிட் ’அய்யப்பனும் கோஷியும்’ திரைப்படம்!

மலையாலத்தில் நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் வெளியான ’அய்யப்பனும் கோஷியும்' திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படவுள்ளது.

author img

By

Published : Mar 19, 2020, 2:00 PM IST

தெலுங்கில் ரீமேக்காகும் மலையாள சூப்பர் ஹிட் ’அய்யப்பனும் கோஷியும்’ திரைப்படம்!
தெலுங்கில் ரீமேக்காகும் மலையாள சூப்பர் ஹிட் ’அய்யப்பனும் கோஷியும்’ திரைப்படம்!

மலையாலத்தில் நடிகர் பிருத்விராஜ், பிஜுமேனன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம், ‘அய்யப்பனும் கோஷியும்’. முன்னாள் இராணுவ வீரருக்கும், காவலருக்கும் இடையேயான ஈகோவை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் மலையாளத்தை தொடர்ந்து இப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்படவுள்ளது. இதை உரிமையை ’ஜெர்சி’ பட தயாரிப்பாளர் சூர்யதேவர நாக வம்சி பெற்றுள்ளார். விரைவில் படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதுதவிர ’அய்யப்பனும் கோஷியும்’ திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யப்படவுள்ளது. அதன் ரீமேக் உரிமையை ஜிகர்தண்டா பட தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சினிமாவை நம்பினார் கைவிடப்படார் - இயக்குநர் பாண்டியராஜ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.