ETV Bharat / sitara

சச்சியின் உடல்நிலை குறித்து நேரில் விசாரித்த ‘அய்யப்பனும் கோஷியும்'

இயக்குநர் சச்சியின் உடல்நிலை குறித்து நடிகர்கள் பிருத்விராஜ், பிஜுமேனன் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு நேரடியாகச் சென்று நலம் விசாரித்து வருகின்றனர்.

இயக்குநர் சச்சி
இயக்குநர் சச்சி
author img

By

Published : Jun 17, 2020, 4:29 PM IST

மலையாளத்தில் இயக்குநர் சச்சி இயக்கத்தில் நடிகர் பிருத்விராஜ், பிஜுமேனன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம், 'அய்யப்பனும் கோஷியும்'. முன்னாள் ராணுவ வீரருக்கும், காவலருக்கும் இடையேயான ஈகோவை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மிக எளிமையான கதையை புதிய வடிவில் சொல்லியிருந்தது, ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

'அய்யப்பனும் கோஷியும்' திரைப்படத்தின் மொத்த பட்ஜெட் ஐந்து கோடிதான். ஆனால், உலகம் முழுவதும் இத்திரைப்படம் பல கோடிகளை வசூல் செய்துள்ளது. இந்தப் படம் தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் இயக்குநர் சச்சி நேற்று (ஜூன் 16) திடீரென உடல்நலக்குறைவால் திருச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், சச்சியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து நடிகர்கள் பிருத்விராஜ், பிஜுமேனன் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் மருத்துவமனைக்குச் சென்று சச்சியின் உடல்நலம் குறித்து, மருத்துவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: இயக்குநர் சச்சியின் உடல்நிலை கவலைக்கிடம் - மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.