ETV Bharat / sitara

திரைப்பட பைரஸியை மையப்படுத்தி வெளிவரும் சீரிஸ்: சோனி லிவ்வுடன் கைகோர்க்கும் ஏவிஎம் நிறுவனம்!

பிரபல ஏவிஎம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம், கோலிவுட்டில் தொடர்ந்து வரும் திரைப்பட படைப்புத் திருட்டை கதைக்களமாகக் கொண்டு ’தமிழ் ஸ்டாக்கர்ஸ்’ எனும் திரில்லர் தொடரை ’சோனி லிவ்’ ஓடிடி தளத்துடன் இணைந்து வழங்க உள்ளது.

ஏவிஎம் புரொடகஷ்ன்ஸ்
ஏவிஎம் புரொடகஷ்ன்ஸ்
author img

By

Published : Mar 24, 2021, 11:29 AM IST

ஈரம், வல்லினம், குற்றம் 23 உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் ‘தமிழ் ஸ்டாக்கர்ஸ்’ எனும் தொடரை ஏவிஎம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. கோலிவுட்டில் தொடரும் திரைப்பட பைரஸியை மையப்படுத்திய இத்தொடர், ’சோன் லிவ்’ ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இது குறித்து ஏவிஎம் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “75 ஆண்டுகளுக்கு மேலாக தரமான கதையம்சம் உள்ள படங்களை அளித்ததன் மூலம் மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம், தனது அடுத்த தயாரிப்பை மக்களுக்கு அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது.

புத்தம் புதிய திரில்லர் கதைக்களம் கொண்ட ’தமிழ் ஸ்டாக்கர்ஸ்’ என்ற இப்படைப்பை இயக்குநர் அறிவழகன் இயக்க உள்ளார். தமிழ் திரைப்பட உலகில் சமீப காலமாக நடக்கும் திரைப்பட திருட்டு கும்பலை மையமாகக் கொண்டு, அதன் யதார்த்தங்களை சுவைபடச் சொல்லும் ’தமிழ் ஸ்டாக்கர்ஸ்’ என்ற தொடரின் மூலம். தன் ஓடிடி பயணத்தை சோனி லிவ்வில் ஏவிஎம் தொடங்குகிறது.

ஒரு படைப்பை சட்டவிரோதமாகவும், அங்கீகாரம் இல்லாமலும் நகல் எடுப்பது பெரும் குற்றம் மட்டுமின்றி, படைப்புத்திருட்டு. இது உலகெங்கும் உள்ள படைப்பாளர்களின் பெரும் கவலைகளில் ஒன்றாகும். இந்தியாவில், தமிழ் திரையுலகம், பல்வேறு ஆன்லைன் திருட்டு வலைதளங்களின் காரணமாக இந்தப் பிரச்சினையுடன் முடிவில்லாத போரை நடத்தி வருகிறது. இந்தக் கதை அந்தத் திருட்டு உலகின் இருண்ட பக்கத்தை ஆழமாகச் சென்று காட்டுகிறது. மேலும் திருட்டு உள்ளடக்கத்தை வெளியிடுவதில் ஈடுபட்டுள்ள குழுவை அடையாளம் காட்டுவதற்கு திரைத்துறையின் தொடர்ச்சியான போரைப் பற்றியும் இப்படம் சொல்கிறது.

இந்தப் படைப்பு பொழுதுபோக்குக்காக மட்டுமின்றி அர்த்தமுள்ளதாகவும் இருக்கும் என்று நம்புகிறோம். இந்தப் படைப்பு தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளிவரவிருக்கிறது.

இப்படத்தில் படைப்பு திருட்டுக்கு எதிரான தமிழ் திரைத்துறையின் இடைவிடாத போரின் கேள்விப்படாத அம்சங்களையும், அதை எதிர்கொள்வதற்கான வழிகள் பற்றியும் சொல்லியிருக்கிறோம். சோனி லிவ்வுடன் இணைந்து பார்வையாளர்களிடம் இதைக் கொண்டு சேர்ப்பதில் நாங்கள் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளோம், இந்தப் படைப்பு ஒரு தலைப்பு செய்திக்கு பொருத்தமான புதிரான கதை அம்சத்துடன் விளங்குகிறது. அறிவழகன் போன்ற தொலைநோக்கு பார்வை கொண்ட இயக்குநருடன் இணைந்து வெற்றி உறுதியாகும் என்று நம்புகிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ’அசுரன்’ செய்தியாளர் சந்திப்பு: அமெரிக்காவிலிருந்து நன்றி தெரிவித்த தனுஷ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.