மார்வெல் தயாரிப்பு நிறுவனத்தின் 22ஆவது திரைப்படமான அவெஞ்சர்ஸ் எண்ட் கேம், உலகம் முழுவதும் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று திரைக்கு வரும் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம், இந்தியாவில் வெளியாவதற்கு முன்பாகவே பல்வேறு சாதனைகளைப் படைத்துவருகிறது,.
இந்நிலையில், இந்தியாவில் மட்டும் செய்த முன்பதிவில் 25 லட்சம் டிக்கெட்டுகள் விற்று சாதனைப் படைத்துள்ளது. இப்படத்தில் ராபர்ட் டி. ஜீனியர், ஸ்கேர்லட் ஜொகன்ஸன், கிறிஸ் இவான்ஸ், பிரைய் லார்சன் ஆகியோர் நடித்துள்ள இப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இது, இந்தியாவில் உள்ள மார்வெல் ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
இந்த அறிவிப்பினை தனியார் ஆன் - லைன் டிக்கெட் விற்பனை நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலரான ஆஷிஸ் சக்ஷேனா வெளியிட்டுள்ளார்.
