'ஷமிதாப்' படத்தைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் பாலிவுட்டில் நடித்துவரும் திரைப்படம், 'அட்ராங்கி ரே'. ஆனந்த் எல். ராய் இயக்கிவரும் இத்திரைப்படத்தில் சாரா அலிகான் கதாநாயகியாக நடிக்க, அக்ஷய் குமார் சிறப்பு வேடத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக மதுரையில் நடைபெற்றுவந்த நிலையில், தற்போது படக்குழு டெல்லி சென்றுள்ளது. மேலும் வரும் 29ஆம் தேதிவரை டெல்லி, நொய்டா பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
'அட்ராங்கி ரே' திரைப்படம் அடுத்த ஆண்டு காதலர் தினத்திற்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பிக்பாஸ் 4: இந்த வாரம் வெளியேறும் நபர் யார்?