நடிகர் தனுஷ் 'ராஞ்சனா', 'ஷமிதாப்' படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக பாலிவுட்டில் நடிக்கும் படம் 'அட்ராங்கி ரே'. இந்தப் படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்ஷய் குமார், சாரா அலிகான் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
பிரபல இயக்குநர் ஆனந்த் எல். ராய் இயக்கும் இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் தொடங்கப்பட்ட நிலையில், கரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு வாரணாசி, மதுரை உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்றுவருகிறது.
இந்த நிலையில், தனுஷும் சாரா அலிகானும் ரஜினியின் 'பேட்ட' படத்தில் இடம்பெற்ற 'மரணம் மாஸு மரணம்' பாடல் பின்னணியில் உடற்பயிற்சியாளர் உதவியுடன் இருவரும் ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொள்ளும் காணொலி வெளியாகியுள்ளது.
இந்தக் காணொலியை சாரா அலிகான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து இந்தக் காணொலியை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கிவருகின்றனர்.