தமிழ் சினிமாவில் உள்ள வெற்றிப்பட இயக்குநர்களில் ஒருவர் அட்லீ. இவர் தமிழில் இயக்கிய நான்கு படங்களும் ஹிட் அடிக்க அடுத்தக் கட்டமாக பாலிவுட்டிலும் திரைப்படம் இயக்க அட்லீக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
சமீபத்தில் அட்லீ இயக்கத்தில் வெளியான 'பிகில்' திரைப்படம் வசூல் சாதனை படைக்க, இவருக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.
திரை வாழ்க்கையில் மட்டுமல்லாது, பர்சனல் வாழ்க்கையிலும் மனிதர் 'அப்படி' வாழ்ந்துக்கொண்டிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். ஏனெனில் அட்லீயும் அவரது மனைவி பிரியா மோகனும், இணக்கமாக இருக்கும் புகைப்படங்களை அவ்வபோது சமூக வலைதளங்களில் பகிர்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இதனிடையே அட்லீ, தனது ஆறாவது ஆண்டு திருமண நாளை நினைவுக்கூறும் வகையில் தன் காதல் மனைவி பிரியாவுக்காக ட்விட்டரில் வாழ்த்து ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில் தனது தோழியும் மனைவியுமான பிரியாவுடன் 43,823 மணிநேரங்கள் ஒன்றாக இருந்துள்ளதாகவும், வாழ்நாள் முழுவதும் இதுபோலவே இருக்கவேண்டும் என தெரிவித்து சீயர்ஸ் அடித்துள்ளார் அட்லீ.
-
Happy wedding anniversary to us
— atlee (@Atlee_dir) November 9, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
It’s been 43,823 hours together with my friend as wife @priyaatlee . cheers together to spent long life with u forever ❤️ luvbuuuuuuuuuuu papa pic.twitter.com/YVvPSw1KaF
">Happy wedding anniversary to us
— atlee (@Atlee_dir) November 9, 2019
It’s been 43,823 hours together with my friend as wife @priyaatlee . cheers together to spent long life with u forever ❤️ luvbuuuuuuuuuuu papa pic.twitter.com/YVvPSw1KaFHappy wedding anniversary to us
— atlee (@Atlee_dir) November 9, 2019
It’s been 43,823 hours together with my friend as wife @priyaatlee . cheers together to spent long life with u forever ❤️ luvbuuuuuuuuuuu papa pic.twitter.com/YVvPSw1KaF
இதையும் படிங்க: உங்களுக்கு வயசே ஆகாது மேடம் - சிம்ரனை சந்தித்த மீரா மிதுன்!