ETV Bharat / sitara

ஷாருக்கான் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட அட்லி; அடுத்த அப்டேட் எப்போது? - ஷாருக்கான் புதியப்படம்

பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் பிறந்தநாள் விழாவில் இயக்குநர் அட்லி தனது மனைவியுடன் கலந்துகொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

srk
author img

By

Published : Nov 3, 2019, 2:32 PM IST

அட்லி - விஜய் கூட்டணியில் மூன்றாவது முறையாக வெளியான படம் 'பிகில்'. பெண்களின் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் விஜய் பயிற்சியாளராக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். தீபாவளி விருந்தாக வெளியான இப்படம் ரசிகர்களிடையை கலவையான விமர்சனங்களை பெற்று ரூ. 200 கோடிக்கு மேல் வசூலை குவித்து வருகிறது.

srk
அட்லி - பிரியா

இதனையடுத்து அட்லி நடிகர் ஷாருக்கானை வைத்து புதிய படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகி வந்த நிலையில், நேற்று (நவ.2) தனது பிறந்தநாளை கொண்டாடிய ஷாருக்கான் அட்லியையும் அவரது மனைவி பிரியாவையும் அழைத்திருந்தார். அப்போது ஷாருக்கானுடன் அட்லியும் அவரது மனைவியும் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அட்லிக்கு ஷாருக்கான் அழைப்பு விடுத்திருப்பது, அட்லியுடன் ஷாருக்கான் பணியாற்றவுள்ளதை கிட்டதட்ட உறுதி செய்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெகு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் வாசிங்க: 'பிகில்' நடிகைகளுடன் அட்லி டிக்-டாக்! இணையத்தில் பரவும் வீடியோ

Intro:Body:

Atlee and wife Priya attend Shah Rukh Khan's birthday bash in Mumbai

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.